வியாழன், டிசம்பர் 12, 2013

எஸ் டி பி ஐ தமிழக அரசிற்கு கோரிக்கை : நிதாகத் சட்டத்தினால் தமிழர்கள் பாதிப்பு

சென்னை: நிதாகத் சட்டத்தினால் சவூதி  அரேபியாவில் வேலை இழந்து தவித்து வரும் தமிழர்கள் தாயகம் திரும்ப  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை  விடுத்துள்ளது. இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின்  (சோசியல் டெமாக்ரடிக்  பார்ட்டி ஆஃப் இந்தியா) மாநில பொதுச்செயலாளர் நிஜாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவிலிருந்து   வேளி நாடுகளுக்கு வேலைவாய்ப்புத்தேடி பல்வேறு மாநில மக்கள் சென்றுள்ளனர். சவூதி அரேபியா நாட்டிலும் வேலை வாய்ப்பிற்காக  தமிழகத்தை சேர்ந்தவர்களும் சென்றுள்ளனர். சவூதி அரேபியாவில் “நிதாஹத்” என்ற சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் மூலம் வெளிநாட்டு தொழிலாளர்கள் வரையறைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதில் அடிப்படை வேலைகளுக்காக சென்றவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டத்தின் மூலம் இந்தியாவில் பல்வேறு மாநில மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியாகியுள்ளனர்.தற்போது 400க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த 65க்கும் மேற்பட்டவர்கள் நிதாஹத் சட்டத்தினால் பாதிக்கப்பட்டு வேலை பார்த்த நிறுவனங்களால் கைவிடப்பட்டுள்ளனர். இதுபோன்று பாதிக்கப்பட்ட மக்களை IFF மற்றும் தமிழ்சங்கம் இணைந்து அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் கொடுத்துவருகின்றனர்.
IFF, தமிழ்ச்சங்க அமைப்புகள் இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் இந்தியா திரும்புவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் திரும்புவதற்கு கடந்த 4 மாதங்கள் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் 5 மாதங்களுக்கு மேல் அவர்கள் வேலைக்கு செல்லாத காரணத்தால் அவர்களும் இங்குள்ள அவர்களின் குடும்பத்தார்களும் வறுமைக்கு ஆளாகியுள்ளனர். அருகிலுள்ள மாநிலமான  கேரள அரசு மலையாளி மக்களை தாயகம் திரும்புவதற்கு அரசே செலவு செய்து பாதிக்கப்பட்ட மக்களை தங்களின் மாநிலத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட தமிழர்களின் உறவினர்கள் எஸ்.டி.பி.ஐ கட்சியில் புகார் அளித்ததையடுத்து கட்சியின் சார்பாக தொடர்பு கொண்டு விசாரணை செய்த போது அங்குள்ள தமிழர்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. எனவே, தமிழகர்களின் நலனில் அக்கரை கொண்டுள்ள தமிழக அரசு அவர்களுக்கு இந்தியா திரும்புவதற்கு உண்டான பயணச் செலவுகளை செய்து அவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்."
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக