புதன், டிசம்பர் 11, 2013

155 பெண்கள் விடுதலை எகிப்தில்

எகிப்தில் ராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராடிய 155 பெண்கள் விடுதலைச் செய்யப்பட்டனர். இவர்கள் மீது சுமத்தப்பட்ட போலீஸ் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது.ராணுவ சதிப் புரட்சியின் மூலம் எகிப்தின் முதல் ஜனநாயக அதிபர் முஹம்மது முர்ஸி பதவி நீக்கம் செய்யப்பட்டு ரகசிய இடத்தில் சிறைவைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து எகிப்தில் நடந்த ஜனநாயகரீதியான போராட்டத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அவ்வேளையில் ஏராளமான பெண்கள் கைது செய்யப்பட்டனர்.ஏற்கனவே ஏழு சிறுமிகள் உள்பட 14 பெண்களை அப்பீல் நீதிமன்றம் விடுவிக்க உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் நேற்று முன் தினம் விடுதலைச் செய்யப்பட்டனர். இது தங்களுக்கு இறைவன் அளித்த விடுதலை என்று மருத்துவக் கல்லூரி மாணவியான உலா அலாஹ் (வயது 18) தெரிவித்தார்.சட்டவிரோதமாக இயக்கமாக செயல்படுதல், குழப்பம் உருவாக்குதல், ஆயுதம் பிரயோகித்தல் உள்ளிட்ட குற்றங்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தன. குற்றங்களை அரசு தரப்பால் நிரூபிக்க முடியவில்லை என்று எதிர்கட்சி வழக்குரைஞர் அஹ்மத் அல் ஹம்ராவி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக