வெள்ளி, டிசம்பர் 06, 2013

லிபர்ஹான் அறிக்கைப்படி பாபரி மஸ்ஜிதை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்! – ஸஃபர்யாப் ஜீலானி -

லக்னோ: பிரதமர் மன்மோகன் சிங்கும், உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவும் லிபர்ஹான் ஆணையத்தின் அறிக்கையின் படி பாபரி மஸ்ஜித் இடிப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாபரி மஸ்ஜித் நடவடிக்கைக் குழுவின் தலைவர் ஸஃபர்யாப் ஜீலானி வலியுறுத்தியுள்ளார்...
 பாபரி மஸ்ஜித் நடவடிக்கைக் குழுவின் கூட்டம் அக்குழுவின் தலைவர் ஸஃபர்யாப் ஜீலானி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜீலானி பேசியது: பிரதமர் மன்மோகன் சிங்கும், உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவும் லிபர்ஹான் ஆணையத்தின் அறிக்கையின் படி பாபரி மஸ்ஜித்  இடிப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாபரி மஸ்ஜித் இடிப்பில் சதித் திட்டம் தீட்டியதாக பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உள்பட அதில் தொடர்புடைய அனைவர் மீதும் நீதிமன்றத்தில் புதிய மனுவை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று ஜீலானி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக