திங்கள், டிசம்பர் 16, 2013

முஸஃபர்நகர் கலவரம்:என்.சி.எச்.ஆர்.ஒ உண்மை அறியும் குழு அறிக்கை

         
முஸஃபர்நகர் கலவரம்  நடந்தது  தொடர்பாக தேசிய மனித உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பான என்சிஎச்ஆர்ஒ வின் (NCHRO)  உண்மை அறியும் குழு கடந்த செப்டம்பர் மாதம் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் விசாரணை மேற்கொண்டது.இக்குழுவில் ரெனி அயலின் (செயலாளர் NCHRO),  வழக்கறிஞர் ஷபானா (CPDR ) வழக்கறிஞர் முகம்மத் யூசுப்  (தமிழ்நாடு)  வழக்கறிஞர் விஜேந்திர குமார் கசானா (புது டில்லி) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.இக்குழு   கலவரம் பாதிக்கப்பட்ட  லோய், ஜோகிய கேடா  மற்றும் கந்தலா (Loi, Jogia Kheda and Khandla) ஆகிய பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களுக்கு நேரடியாக சென்று  பாதிக்கப்பட்ட , சித்தரவதை மற்றும் கொடுமைபடுத்தப் ப ட்ட ஆயிரக்கணக்கான மக்களை  சந்தித்து அவர்களிடமிருந்து  பெறப்பட்ட தகவல்களை அறிக்கையைாக தயார் செய்துள்ளது.இதே போன்று பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மீரட் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் இக்குழு சென்று அங்கு மருத்துவமனை உயர் அதிகாரி   டாக்டர் சுபாஷ் சிங், முசபார் நகர் மாவட்ட நீதிபதி கோஷல் ராஜ் ஷர்மா மற்றும் முஸஃபர்நகர் காவல்துறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஆகியோரை சந்தித்து  விரிவாக விவாதித்துள்ளது.
1.விரிவான அறிக்கை
பாதிக்கப்பட்டவர்களின் கூற்றுப்படி கலவரம் ஹிந்து ஜாட் இன மக்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகும். வகுப்பு வாத சக்திகளால்  முஸ்லிம்  விரோத மனப்பான்மை  நன்கு திட்டமிடப்பட்டு தொடர்ச்சியாக பல்வேறு வழிமுறைகள் மூலம் நீண்டகாலமாக நஞ்சாக  விதைக்கப்பட்டுள்ளது.  அரசியல் ஆதாயத்திற்காக ஜாட் இன மக்களை பயன்படுத்தி காவிக் கொள்கையை நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது .
ஹிந்து ஜாட்டுகள் ஒபிசி வகுப்பினராக சட்டரீதியாக கருதப்பட்டாலும் சமூக ரீதியாக ஆதிக்க உயர் சாதி மனப்பான்மையுடன் ஆணவத்துடன் தான் நடந்துகொள்கின்றனர். இதனால் பாசிச சிந்தனை திட்டம்  ஜாட்  இன மக்களிடம் ஊடுருவ வாய்ப்பாக அமைந்துவிட்டது.
கவால் என்பது முஸ்லிம்கள் அதிகமுள்ள பகுதி, அதற்கு அருகில் உள்ள மாலிக்புரா என்ற பகுதி ஹிந்து ஜாட் மக்கள் வாழும் பகுதி. இங்கு ஷானவாஸ் என்ற முஸ்லிம் இளைஞரை, சச்சின் மற்றும் கௌரவ் ஆகிய ஜாட் வகுப்பைச் சார்ந்த இரு இளைஞர்கள்  தமது தங்கையை  கேலி செய்தார் எனக் கூறி  திட்டமிட்டு ஆகஸ்ட் 27 , 2013 அன்று  பைக் ஆக்சிடன்ட் மூலம் கொன்றிருக்கிறார்கள்.
இதனை அறிந்த 45 நிமிடத்திற்குள் மற்றொரு முஸ்லிம் கும்பல் விரைந்து சென்று  அவர்கள் கவால் பகுதியை தாண்டி  வீட்டிற்கு செல்வதற்கு  முன் அவ்விருவரையும் தாக்கி கொன்றிருக்கிறது.
இதன் பின்பே   செப்டம்பர் 7 அன்று கூடிய ஜாட்களின் மஹா பஞ்சாயத்தில் பாசிச புல்லுருவிகள் ஆதரவு தெரிவித்த பிறகு இனப்படுகொலை தூண்டிவிடப்பட்டுள்ளது . செப்டம்பர் நடுப்பகுதி வரை கலவரம் தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்துள்ளது.
முஸஃபர்நகர் மாவட்டத்தில் பெரும்பாலான நகர  மற்றும் கிராமப் பகுதிகள் காவி மயமாக்கப் பட்டதற்கான அறிகுறிகள் தெரிகிறது.
“நமது மகளையும் மருமகளையும் காக்கவேண்டும்!” என்ற கோஷத்துடன்  “கொல்லப்பட்ட ஜாட் இளைஞர்களுக்கு  நீதி வேண்டும்” என்ற போர்வையில் சுமார் ஒன்று முதல் ஒன்றரை இலட்சம் வரை கைகளில் கத்தி மற்றும் கூர்வாழுடன் ஜாட்  மக்கள் ஒன்று திரட்டப்பட்டு பாஜக வின் ஹுகும் சிங் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றியிருக்கிறார்.
அவர் அக்கூட்டத்தின் போது, ஹிந்துத்துவ கோஷத்தை எழுப்ப வேண்டும், ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான  குஜராத் படுகொலை புகழ், பிரிவினைவாத அரசியல் புள்ளி,   நரேந்திர மோடியை பிரதம மத்திரியாக்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கையை வைத்துள்ளார்.
அதன் பின்பு  “மோடியை கொண்டுவாருங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்” என்று சர்ச்சைக்குரிய மோடியை முன்னிறுத்தி  பாஜக பிரச்சாரம் செய்யத் தொடங்கி இருக்கிறது.
இதே போல் ஆகஸ்ட் 27 சம்பவம் ஒரு லவ் ஜிஹாத் ( அதாவது முஸ்லிம் இளைஞர்கள் ஹிந்து பெண்களை பணம் செல்போன் மற்றும் பைக் ஆகியவற்றை ஆசை  காட்டி கவர முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.)
இது  தான் நடக்கும்  கலவரத்திற்கு மூல காரணம் என்று ஊடகங்களும் வகுப்புவாத சக்திகளும் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களிடமும், பொது மக்களிடமும்  விசாரித்து பார்த்ததில் லவ் ஜிஹாத் என்றால் என்னவென்று தமக்கு தெரியாது என்கின்றனர். யாருக்கும் தெரியாது என்பது உண்மைதான்.
காவல்துறை கண்காணிப்பாளரான கல்பனா சக்சேனா அவர்களிடம் உண்மை அறியும் குழு கேட்ட போதும் கூட  லவ் ஜிஹாத் பற்றி தான் எதுவும் கேள்விப்படவில்லை என்பதாக சொல்லியுள்ளார்.
சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து ஒவ்வொரு கால கட்டத்திலும் வெவ்வேறு பொய் பிரசாரத்தையும், தந்திரங்களையும் வகுப்புவாத சக்திகள் மேற்கொண்டு வருவதை நாம் அறிவோம் . இந்த வகையில் தேசம் முழுவதும் அவர்கள் செய்யும் வெறுப்பு  பிரச்சாரம் மற்றும்  பொய் பிரசாரங்களின் வரிசையில் சேர்க்கப்பட்ட  புதிய சொல்லாடல் இந்த லவ் ஜிஹாத் என்பது தெளிவாகிறது.
‘நாய்க்கு பைத்தியம் பிடித்துவிட்டது’ என்று பிரச்சாரம் செய்துவிட்டு பின்னர் ‘சுட்டுத் தள்’ என்கிற பிரபலமான கருத்துப்படி லவ் ஜிஹாத் பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு, பின்னர்  வகுப்புவாத வன்முறையை கட்டவிழ்த்து விடப்பட்டு முஸஃபர்நகர் முஸ்லிம்கள் பலியாக்கப்பட்டுள்ளனர்.
இது தீய உள்நோக்கத்துடன் திட்டமிடப்பட்டது என்பதற்கு, உதைப்பூர் (ராஜஸ்தான் ) வி எச் பி பத்திரிகை சந்திப்பில் அசோக் சிங்கால் பத்திரிகை சந்திப்பு சாட்சி. பாசிச சக்திகளிடம்  தீய உள்நோக்க திட்டம் இருந்ததை  அசோக் சிங்கால் பத்திரிக்கை சந்திப்பு தெளிவாக நிரூபித்துள்ளது.
செப்டம்பர் 15, 2013 திங்கள் கிழமை அன்று “லவ் ஜிஹாதுக்கு குஜராத்தை போல முசாபர்  நகரிலும் பதில் கிடைத்துவிட்டது” என்றும்  “மேற்கு உத்தரபிரதேசில் முசபார் நகர் ) லவ் ஜிஹாதிகளுக்கு தக்க பதிலடி ஹிந்துக்கள் குஜராத்தைப் போல கொடுத்துவிட்டனர்.” என்றும்  அசோக் சிங்கால் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் .
2. நிவாரண முகாம்கள்
லோய் நிவாரண முகாமில்  பிளாஸ்டிக் சீட் வைத்து மறைக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களில் 4500 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோனோர் வயல்வெளிகளில் கூலி வேலை செய்யும் தொழிலாளிகள்.
முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் இருவர் அனஸ்  (7 வயது ) மற்றும் சொட்டி (50 வயது ) ஆகியோர் வந்த  மூன்றாம் நாளே இறந்துவிட்டனர். அவர்களிடம் கலவரம் குறித்து விசாரிக்கையில் அவர்கள் சொன்னது ஜாட் இன கும்பல் மஹா பஞ்சாயத்தை முடித்த கையோடு அவர்களின் கிராமங்களுக்கு காட்டுக் கூச்சல் போட்டு  கத்தியவாறு வந்துள்ளனர். வந்தவர்கள் “ஹர ஹர மகாதேவ், முல்லான் கி தாடி கட்டோ, சூர் கட்டோ” அதாவது முஸ்லிம்களின் தாடியை வெட்டி எறியுங்கள்,  அவர்களின் தலையையும் வெட்டி எறியுங்கள் என்று கத்தியவாறு சென்று வீடுகள், பள்ளிவாசல்கள் மதரசாக்களுக்கு தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.
ஜாட்  கலவரக்காரர்கள் நீண்ட கூர்மையான வாள், கௌடா என்ற ஆயுதம்,  ரைபிள் துப்பாக்கி, கரும்பு  வெட்டும் ஆயுதம்,  நாட்டுத் துப்பாக்கி போன்ற கொடும் ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளனர்.
புகனா என்ற பகுதியை  சேர்ந்த இரண்டு பெண்கள், நூர்ஜஹான் மற்றும் வஹீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) ஆகியோரை கற்பழித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களிடம் பேசும்போது இறந்த உடல்கள் வயல்களில் கொட்டப்பட்டதாகவும்  புகானா பகுதியை சேர்ந்த 35 பேரை காணவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
முஹம்மது ஜாவிதின் மனைவியான குல்சானா, ஜாட் கும்பல் வரும்போது,  ஒன்பது மாத நிறைமாத கர்ப்பிணி. அக்கும்பல் அவளுடைய நகைகள் அனைத்தையும்  கொடுத்துவிட்டால் அவளை தொட மாட்டோம்  என்று மிரட்டியுள்ளது. அவளும் அவ்வாறே அனைத்து நகைகளையும்  கொடுத்துவிட்டு ஓட்டமும் நடையுமாக முகாமை வந்தடைந்து மறுநாளே முகாமில் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார்.
ஜோகியா கேதா என்ற பகுதியில் உள்ள முகாம் என்பது அப்பகுதியிலுள்ள மதரசா.  அங்கு 300 குழந்தைகள் உட்பட 120 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர் . சுமார் 50 கர்ப்பிணி பெண்கள் முகாமில் குழந்தையை பெற்றேடுத்துள்ளனர். பல பெண்கள் புகனா பள்ளிவாசலில் வைத்து ஜாட் கும்பலால் கற்பழிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியுள்ளனர்.
கலவரம் தொடங்கிய போது பல பெண்களை காணவில்லை. சுமார் 18 வயதுள்ள ரெஹானாவின்  காலில் பலத்த காயம் இருந்துள்ளது.
ஒரு முஸ்லிம் இளைஞருக்கு 20 வெட்டுக்காயங்கள். ஜாட் வெறியர்கள் இவரை வயலில் உள்ள பம்புசெட்டு(tubewell room) அறையில் சுமார் 12 மணிநேரம் வைத்து சித்தரவதை செய்து கொன்றுள்ளனர்.
முழு அளவிலான கலவரம், அதன் உச்சம் செப்டம்பர் 7 மற்றும் 8 ல் தொடங்கி செப்டமர் மாத மையப் பகுதி  செப் 15 வரை நடைபெற்றது.
கலவர நேரத்தில் பெரும்பாலான காவல்துறை அதிகாரிகள் வெறும் பார்வையாளராக இருந்துள்ளனர் . கலவரக்காரர்கள் பெண்களின் ஆடைகளை கிழித்து எரியும் போது கூட தலையிட மறுத்துள்ளனர் காவல்துறையினர் தங்கள் விரிவான வாக்குமூலத்தை பதிவு செய்ய  மறுத்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கூறியுள்ளனர்.
அந்த பகுதியில் காணமல் போனவர்கள் சனியா (5 வயது) ரபீக் (19வயது)  இஸ்லாம் (60 வயது) அசு முஹம்மது (த/பெ யாசின், புகானா கிராமத்தை சேர்ந்தவர்) கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இப்பகுதி கலவரத்தில் சுமார் 15 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர் .
கந்தலா முகாம் அங்குள்ள ஈத்கா மைதானத்தில் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதில் கட்டி முடிக்கப்படாத இரண்டு மாடி கட்டிடமும் அடங்கும். அதில் சுமார் 12000 பேர் வைக்கப்பட்டிருந்தனர்.
தன்னுடைய கண் முன்னே 5 முஸ்லிம்கள் ( ஹாஜி சிராஜுதீன் (75),  ஹமீதா க/ பெ சிராஜுதீன்,  கரீம் கமலுதீன் (75),  உமர்தீன் சித்திக் (80),  வஹீதா (55) க/பெ யாமீன் ) ஆகியோர்  ஜாட் கும்பலால்  புகானா காவல் நிலைய  காவல்துறை அதிகாரியும்  ஜாட் இனத்தை சேர்ந்தவருமான ஓம் பீர் சிரோஹி என்பவர் முன்பு அவர்கள்  கொல்லப்படுவதை தாம் நேரில் பார்த்ததாக லிசார்ட் பகுதியை சேர்ந்த சையத் ஹசன் குமுறியுள்ளார்.
ஹசன் கொலை செய்த குற்றவாளிகளையும் அடையாளம் காட்டியுள்ளார். அவர்கள் பெயர்கள் 1) சுரேந்தர் த/பெ ஸ்ரீபால், 2) ராஜிந்தர், 3) ரிஷிதர் ஜகதீஷ், 4) ப்ரோமோத், 5) ரவீந்திரன்,  6)விபின்,  7)சுனில்,  8)சுரேஷ்,  9)பாரா பயிலன்,  10)இன்டர் காகத்,  11)குல்தீப்,  12)வால்மீகி,  13)பாபா ஹரி கிருஷ்ணன் ஆகியோர். இவர்களை பற்றிய புகாரை கந்தலா காவல்துறை அதிகாரி ஹரிஷ் சந் ஜோசியிடம் முன்பே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை யாரும்  கைது செய்யப்படவில்லை.
இதில் அதிர்ச்சிக்குரிய செய்தி என்னவெனில் பங்கஜ் மாலிக் என்ற காங்கிரஸ் எம் எல் ஏ, (ஷாம்லி தொகுதியை சேர்ந்தவர்) மஹா பஞ்சாயத் கூட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு பாஜகவின் என்எல்ஏ சங்கீத் சிங்கின் வன்முறையை தூண்டும் பேச்சை கேட்டது மட்டுமின்றி முஸ்லிம்களுக்கு எதிராக ஜாட் கலவரக்காரர்களுக்கு ஆயுத விநியோகம் செய்துள்ளார். இவர் கடந்த தேர்தலில் முஸ்லிம்களின் பெரும்பாலான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது .
பட்டதாரி பெண் குல்சூம் மற்றும் காத்தூன் ஆகிய இருவரும் புகானா கிராமத்தை சேர்ந்தவர்கள் . இவ்விருவரும் ஜாட் கலவரக்கரர்களால்  கற்பழிக்கப்பட்டுள்ளனர்.
இந்த முகாமிலும் பல கர்ப்பிணிப் பெண்கள் எந்த வசதியுமில்லாத இருட்டு அறையில் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். நிறை மாத கர்ப்பிணிகள் கூட அதே கட்டிடத்தில் தான் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதுவல்லாமல் காணாமல் போனவர்கள், கொலை மற்றும் கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக செய்திகள் பல்வேறு முகாம்களில் பாதிக்க பட்டவர்களிடம் இருந்து வந்துகொண்டே இருக்கிறது .
பாபு த/பெ சயீ த்,   பாக்பெட் மாவட்டம்  இவருடன் இவரின் குடும்பத்தை சேர்ந்த 4 நபர்கள் காணவில்லை என்று தகவல்கள் வந்துள்ளது .
யூனுஸ் த/பெ ஹாமீம் பட்டானா வை சேர்ந்தவர், ரபீக் 19 வயது த/ பெ பாபு ,  சயீனா 5 வயது த/ பெ அல்தாப், ரெஹானா 5 மாத குழந்தை த /பெ நயீம் ஆகியோரை இன்னும் காணவில்லை.
மொய்னு என்பவரின் சகோதரரை அவரின் கண் எதிரே ஜாட்  கும்பல் கொன்றுள்ளனர். கொல்லப்பட்ட அசு த/ பெ இக்பால் லாக் கிராமத்தை சேர்ந்தவர்.  ஜோலா காவல் நிலையத்தில் இவர் புகார் தெரிவித்துள்ளார்
ரயீசுதீன் த/பெ கபூரா முஹம்மது புறா  கிராமத்தை சேர்ந்தவர் இவரையும் ஜாட் கும்பல் கொன்றுள்ளது. ஹுசைன்பூர் முகாமில் காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாம் 65 வயது த/பெ நதீர் புகனா கிராமத்தை சேர்ந்தவர் . இவரை சாட் கும்பல் 10 துண்டுகளாக  வெட்டி வெட்டி கொன்றுள்ளனர்.
காரத் கிராமத்தை சேர்ந்த முன்னா இவரின் தந்தை ஷகீர் த/பெ சர்புதீன் , இவரை சாட் கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளது.
காசிம் என்ற இவரின் தம்பியையும் கொன்றுவிட்டனர் . ஜாவிட் 16 வயது த/பெ ஹாஜி மான் அலி புகானா கிராமத்தை சேர்ந்தவர் கடுமையான வெட்டுக் காயத்துடன் பாதிக்கப்பட்டுள்ளார்.
முஹம்மது யூனுஸ் மரத்வாடா முகாமில் தங்கியிருக்கிறார் . அவர் கூறும்போது அபுல் ஹசன் த/பெ இஸ்மாயில் என்ற 60 வயது லொய்  கிராமத்தை சேர்ந்த முதியவரை   கொன்றுள்ளனர் என்று தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவல்கள் பல நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பலரிடமிருந்து பெறப்பட்டவை .
ஷிமலி கா தாஜ்பூர் என்ற ஊரில் உள்ள ஷகீர் மஸ்ஜித்தின் முத்தவல்லி அப்துல் ஹமீது அவர்களை ஜாட்  கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்ட தகவலை பால்வா முகாமில் தாண்டியிருக்கும்  பள்ளிவாசல் இமாம் ஹபிழ் ஷகீன் தெரிவித்துள்ளார்.
நசீம் த/பெ முஸ்தகீம் , அப்துல் வஹித் த/பெ சிராஜுதீன் , முஹம்மத் தாகிர் மற்றும் இக்பால் த/பெ தாகிர் இவருடன் இன்னும் இரு முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ரயீசா காத்தூன் 48 வயது நிரம்பிய பெண்மணியை மகேக்சிங் பீரம் சிங் இக்பால் கௌடா தலைமையில் ஒரு கும்பல் அவளை உயிருடன் எரித்து கொன்றிருக்கிறது. இறந்தவருக்கு ஒன்பது குழந்தைகள் அவர்கள் அனைவரும் மரத்வாடா முகாமில் தற்போது தங்கியிருக்கின்றனர் என்ற தகவலை முஹம்மது ஹஷிம் தெரிவித்துள்ளார்.
நபீஸ் த/பெ கமாலுதீன் புடா கிராமத்தை சேர்ந்தவர் ஐவரும் காணவில்லை அல்லது கொல்லப்பட்டிருப்பார். இத்தகவல்கள் தோடா நிவாரண முகாமிலிருந்து பெறப்பட்டவை.
முஹம்மத் பூர் ரைஸ் மஸ்ஜித் உட்பட பல்வேறு பள்ளிவாசல்கள் மதரசாக்கள் கலவரத்தின் போது எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது.
லிசார்ட் பகுதியை சேர்ந்த அஸ்முதீனையும்  ஹலீமா என்ற பெண்ணையும் மரம் அறுக்கும் சா மில்லில் வைத்து அங்குள்ள ரம்பத்தை  கொண்டு அவர்களை உயிருடன் அறுத்து கொன்று பின்னர் எரித்து சாம்பலக்கியுள்ளனர்.
27 வயது முன்சரினா மிரைசியின் மகள் கத்தியினால் வெட்டுக்காயம் பட்டுள்ளார். கலவரம் தொடங்கிய போது இவரை நோக்கி எறியப்பட்ட கத்தி குறிதப்பி  மகளை தாக்கியுள்ளது. அவளுடைய கணவரும் வெட்டுக் காயத்தால் பாதிக்கப் பட்டுள்ளார். அதிகாலை 3 மணிக்கு அவர்களுடைய சொந்த வீட்டை விட்டு துரத்தப்பட்டுள்ளார். குற்றவாளிகளின் அடையாளங்களையும் தெளிவாக குறிப்பிடுகிறார்.
ஜூலைஹாவை சேர்ந்த மிட்டல் த/பெ ராஜ்பால் , ஜெயபால் மற்றும் தரம்பால் த/பெ ஜும்மா மற்றும் தீரஜ் த/பெ தேஜ்பால் ஆகியோரை குறிப்பிடுகிறார். இவருடை புகார் ஜோலா முகாமில் 9/9/2013 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது அவர் ஜோலா நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார். இதுவரை குற்றவளைகளை கைது செய்ய காவல்துறை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
கலவரத்தின்போது முஸ்லிம்களுக்கு காவல்துறை எந்த வகையிலும் உதவவில்லை .மாறாக அங்கு நடக்கும் சம்பவங்களை தங்கள் உறவினர்களிடமும் காவல்துறை உயரதிகாரிகளிடமும் தெரியப்படுத்திவிடாமல் இருக்க அவர்களின் செல்போன்களை பிடுங்கிக் கொண்டனர். பின்பு நேராக ஜாட்  சமுதாயத்திடம் சென்றுள்ளனர். இதனால் அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் அரசாங்கம் தங்களது பாதுகாப்பு குறித்து பூரண நம்பிக்கை ஏற்படுத்தும் வரை தங்களது வீடுகளுக்கு  திரும்பிச் செல்ல முடியாது என்று ஒரு பெண் தெரிவித்துள்ளார்.
3.      மீரட் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்
டாக்டர் சுபாஷ் சிங் (மீரட் மருத்துவ கல்லூரி superintendant)  பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில் இருந்து அனைத்து உதவிகளையும்  ஒத்துழைப்பையும்  கொடுத்துள்ளார்.
அவர் கூறும்போது கலவரம் ஏற்பட்டு மக்கள் சிகிச்சைக்காக வரும் நிலையில் மருத்துவர்கள், நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் இதர ஊழியர்கள்  விடுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காக அவர்கள் விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்படவில்லை . முஸஃபர்நகர் அரசு மருத்துவமனையிலேயே வைத்து சிகிச்சை அளிக்க முடிகிற சிறிய காயத்திற்கு கூட இங்கு மீரட்டிற்கு அனுப்பி வைத்து விடுகின்றனர். அது மேலும் வேலைப் பளுவை அதிகரித்துவிட்டது.
கடுமையான காயம் பட்டவர்களில் 7 பேருக்கு ஒருவர்  ஜாட் இனத்தை சேர்ந்தவர். கோபல்பூரை சேர்ந்த உமர்தீன் தலையிலும் வயிற்றிலும் கடுமையாக தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார். கத்திக்குத்து 8 அங்குல நீளம் இருந்தது. ஷாபூரில் உள்ள காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெஹர் ஆலம் (55) என்பவருக்கு தலையில் வெட்டு விழுந்திருக்கிறது . உடல்  ஊனமுற்ற அமீருதீன் என்பவரும் கடுமையாக காயம் அடைந்துள்ளார்.
மொதமேது லியாகத்தின் (35) வலது கால் முழங்காலுக்கு கீழ் துண்டாடப்பட்டுள்ளது . உடம்பு முழுவதும் பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டுக் காயங்கள். ஷப்பிர் (75) வயிற்றில் துப்பாக்கியால் சாட் கும்பல் சுட்டுத் தள்ளியிருக்கிறது.
யாமீன்(23)  பூமி எனும் பகுதியை சேர்ந்தவர் தலையிலும் முகத்திலும் தோள் பட்டையிலும் கைகளிலும் கடுமையான வெட்டுக்காயங்கள். இது மெடிகோ லீகல் வழக்குகள் (MLC ) என்பதால் மருத்துவமனை கொடுத்த வேண்டுகோளை ஏற்றும் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது
மருத்துவர்களின் கண்காணிப்பு சிகிச்சை முறை  நிர்வாகம் நல்ல முறையில் இருந்தது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் சில குறைபாடுகள் இருப்பதை காண முடிந்தது.
காயத்தின் தன்மை குறித்து மெடிக்கல் சார்ட்டில் காயத்தின் தீவிரம் பற்றி தெளிவாக வெளிப்படுத்தப்படவில்லை.  சிகிச்சை பெற்றவர்களின் மருத்துவ அறிக்கையில் இந்த தவறுகள் களையப்பட்டு வழக்கிற்கு பயன்படும் விதத்தில் சரியான தகவல்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.
3. மாவட்ட நீதிபதி முசபார்நகர்
முஸஃபர்நகர் மாவட்ட நீதிபதி கோஷல் ராஜ் ஷர்மா, ஒவ்வொரு நிவாரண முகாமுக்கும் ஒரு அறிக்கையை தாம் நியமித்துள்ளதாக கூறியுள்ளார்.
செப்டம்பர் 26 அன்றுவரை உள்ள தகவல் அடிபடையில் 41 நிவாரண முகாம்களில் 27,198 பேர் தங்க  வைக்கப்பட்டிருந்தனர் . மறுநாள் செப் 27 அன்று 6 முகாம்கள் கலைக்கப்பட்டு 9,789 பேர் வீட்டிற்கு அனுப்பப் பட்டனர் என்று கூறியுள்ளார்.
இது நமக்கு நம்பமுடியாத ஜீரணிக்க முடியாத செய்தியாக உள்ளது. நாம் பாதிக்கப்பட்டவர்களிடம் பேசும்போது அவர்கள் சொன்னது என்னவெனில் தங்கள் கிராமத்திற்கு திரும்பிச் செல்லவே முடியாது. காரணம் பாதுகாப்பின்மையும் கடும் பீதியும் மக்கள் மனதில் இன்றும்  நிலவிக் கொண்டிருக்கிறது.  கர்ப்பிணி பெண்கள் (கூட வீட்டிருக்கு செல்ல விரும்பாமல் ) 198 பேர் நிவாரண முகாமில் இருக்கின்றனர் 16 பேர் அங்கேயே  குழந்தைகளை பெற்ற்றெடுதிருக்கின்றனர் என்று தெரிய வருகிறது.
16 ஊர்களில் தான் கலவரம் வெடித்திருக்கிறது மற்றவர்கள் பயத்தின் காரணமாக தங்கள் ஊரை விட்டு காலி செய்து நிவரண முகாமுக்கு வந்துள்ளனர் என்று மாவட்ட நீதிபதி கூறியுள்ளார்.
நடைபெற்ற 49 சம்பவங்களில் 32 சம்பவங்கள் முசாபர் நகரிலும் எஞ்சியுள்ள 17 அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும்  நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள். 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 9 மத கட்டிடங்கள் இடித்து தகர்க்கப்பட்டுள்ளது என்று மாவட்ட நீதிபதி தகவல் தெரிவித்துள்ளார்.
புகாரை பெறுவதற்காகவே இரண்டு காவலர் களை  ஒவ்வொரு முகாம்களுக்கும் அனுப்பியுள்ளதாக கூறுகிறார். ஆனால் பாதிக்கப் பட்டவர்களோ காவலர்கள் ஒரே ஒருமுறை தான் வந்தனர் அவர்களும் முழுமையாக புகாரை ஏற்கவில்லை. வேண்டா வெறுப்பாக அரை மனதுடன்தான் பெயரளவில் புகார்களை பெற்றனர் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திலும்  உள்ள ஒரு   நபருக்கு  அரசு வேலை வழங்க வேண்டும் என மாநில அரசு உத்தரவு வழங்கும் என்றும் 2 கோடியே 10 லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும் என அரசுக்கு தாம் பரிந்துரை செய்ததாகவும் மாவட்ட நீதிபதி கூறியுள்ளார்.
கலவரத்தின்போது கடமையை செய்யாத காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். அசோக் மித்ரா ஜெயின் டி ஐ ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு கலவர வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த குழுவில் 2 கூடுதல் எஸ்பி 4 டிஎஸ்பி 30 இன்ஸ்பெக்டர்கள் இருப்பார்கள். இவர்கள் அனைவரும் முசாபர் நகரை விட்டு வெளியே இருந்து பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வகையில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி அவர்கள் சார்பாக மூன்றாம் தரப்பில் உள்ளவர்கள் கூட பயமில்லாமல் புகாரளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
மாவட்ட நிர்வாகம் மக்கள் மனதில் அமைதியை நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில்  எந்த நடவடிக்கையும் அமையவில்லை எனவே மாவட்ட நீதிபதி கூறிய புள்ளிவிவரங்கள்  அனைத்தும் செயற்கையாகவும்  கடமையை கழிப்பது போல் தான்  இருக்கிறது.  கலவரத்தை நிறுத்த மாவட்ட நீதிபதி நீதிமன்ற அதிகாரத்தை பயன்படுத்தவில்லை.
4. SSP (in-charge), Muzaffarnagar
முஸஃபர்நகர் SSP கலவர நேரத்தில் விடுப்பில் சென்று விட்டதால் கல்பனா சக்சேனா ( SP crime ) என்ற அதிகாரிக்கு  கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டு முசாபர்நகரின் கூடுதல் SSP யாக நியமிக்கபட்டார்.
அவர் 52 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் அதில் 2 அடையாளம் தெரியாதவை என்று கூறியுள்ளார். 13 பேர் காணவில்லை என்று வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் அதில் இருவர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
192 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 142 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரத்திற்கு பிறகு 5,572 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றவியல் நடைமுறை சட்டம் 106 மற்றும் 116 பிரிவின்கீழ் கைது செய்யப்பட்டு அவர்களிடம் எந்த ஒரு குற்ற நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டேன் என்ற உறுதிமொழியுடன்  பாண்டு பத்திரத்தில் எழுதி கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது. இதற்கு  ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை யுடன்  அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கலவரத்தை தடுப்பதில் உளவு அமைப்பு முழு தோல்வி அடைந்ததை SSP (பொறுப்பு ) ஒப்புக்கொண்டுள்ளார்.
சரியான நேரத்தில் தமக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தால் கலவரத்தை கட்டுப்படுத்தியிருக்க முடியும் என்றும் கூறியுள்ளார் .
கற்பழிப்பு வழக்குகளை பற்றி கேட்டபோது தன்னுடைய கவனத்திற்கு அன்றுவரை அதுபோன்ற செய்திகள் எதுவும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
எனவே  கற்பழிப்பில் பாதிக்கப்பட்ட 5 பெண்களுடைய தகவல்களை நாம் அவர்களிடம் கொடுத்த போது  அவர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். மருத்துவ சோதனைக்கும் இதர சட்ட நடைமுறைகளுக்கும் உத்தரவிட்டார். அதன் பிறகே செய்திகள் ஊடகங்களில் வெளியானது. இது பாராட்ட படவேண்டிய நடவடிக்கை .
மஹா பஞ்சாயத்தை ஏன் தடை செய்யவில்லை என்று கேட்டபோது போலிஸ் தடுக்க முற்பட்டால் அது பதற்றத்தை அதிகரித்து விடக் கூடும்   என்று பதில் அளித்துள்ளார். எனவே மஹா பஞ்சாயத்தை  காவல்துறை தடுக்கவில்லை என்ற இந்த பதில் ஏற்றுக்கொள்ள முடியாதது.
SSP யாக  பொறுப்பு வகிக்கும் கல்பனா சக்சேனா அவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் என்னவெனில் இப்பொழுது தான் கைத்துப்பாக்கி ரைபிள் ரக துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்களின் உரிமையை ரத்து செய்யலாமா அல்லது வேண்டாமா என்று நிர்வாகம்  சிந்தித்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார் . இதுவே முசாபர் நகர் காவல்துறை நிர்வாகம் எந்த லட்சணத்தில் அங்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதற்கு தெளிவான உதாரணம்.
5. காவல்துறையும்  கலவரமும் – கலவர சூழல் தொடர்ந்து  நிலவும் அபாயம்  
கவால் சம்பவம் நடந்த மறுநாளே 28 ஆம் தேதி அன்று சுபாஷ் சந்திர துபே SSP யாக பதவி அமர்த்தப்படுகிறார். முழு அளவிலான கலவரத்தை தொடங்க  அனைத்து ஏற்பாடுகளும் ஜாட் கும்பல் தரப்பில் செய்யப்படுகிறது. அவர்கள் சுதந்திரமாக நினைத்ததை செய்வதற்கு கைகள் அவிழ்த்து விடப்படுகிறது. செப்டம்பர் 7 ஆம் தேதி அன்று முழு அளவிலான கலவரம் நடைபெறுகிறது . அவற்றை சுபாஷ் சந்திர துபே கட்டுப்படுத்த வில்லை.
முஸ்லிம் சமுதாயம் பெரிய அளவிலான நஷ்டத்தை   சந்தித்த பிறகுதான் 11 நாட்களுக்கு பிறகு 9 ஆம் தேதி துபே பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். இந்த குறுகிய காலத்திற்கு மட்டும் இவரை இங்கு நியமித்து பின்னர் முஸ்லிம்கள் நன்கு பாதிக்கப்பட்ட பிறகு பணியிடமாற்றம் செய்யப்பட்டது  புரியாத புதிராகவே உள்ளது.
கலவரத்தில் கடுமையாக பாதிக்கப்படும் முஸ்லிம்களுக்கு காவல்துறை உதவவில்லை. முஸ்லிம்கள்  பாதிக்கப்படும் போது   காப்பாற்ற முன்வரவில்லை . உறவினர்களிடமும் உயர் அதிகாரிகளிடமும் நிலவும் அசாதாரண சூழல் குறித்து தெறித்து விடாமல் இருக்க தங்களிடம் இருந்த செல்போன்களை பிடுங்கிக் கொண்டு நேராக ஜாட் சமுதாயத்திடம் காவல்துறை சென்றுள்ளது. காவல்துறை நேர்மையாக நடுநிலையோடு  நடந்துகொள்ளவில்லை  . எனவே தங்கள் வீடுகளுக்கு திரும்பி செல்ல தாங்கள் விரும்பவில்லை அரசின் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம் .என்று ஒரு பெண் கூறியுள்ளார்.  கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய பாதுகாப்பும் கொடுத்து அவர்கள் மனதில் நம்பிக்கையை அரசு ஏற்படுத்தினால் மட்டுமே தங்கள் வீடுகளுக்கு அவர்கள் திரும்புவர்.
இங்கு சச்சார் கமிட்டி அறிக்கையை பற்றி குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் . காவல்துறையினரால் பலகாலமாக ஓரவஞ்சனையுடன் நடத்தப்படும் முஸ்லிம் சமுகத்தின் மனதில் நம்பிக்கையை ஊட்ட முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் குறைந்த பட்சம் ஒரு சப் இன்ஸ்பெக்டர் தரத்தில் ஒரு காவல்துறை அதிகாரியையாவது நியமிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார். 
 நமது பரிந்துரைகள்
  1. கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவப் படையை வலியுறுத்த வேண்டும்.
  2. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு போதுமான இழப்பீடு வழங்க ஆவண செய்ய வேண்டும்.
  3. கலவரம் தொடர்பான குற்றங்களுக்கு சரியான மற்றும் தெளிவான முதல் தகவல் அறிக்கைகள் (FIR) எவ்வித கால தாமதமுமின்றி பதிவு செய்யப்படல் வேண்டும்.
  4. போலியான மற்றும் தவறான புகைப்படங்கள், குறுஞ்செய்திகள் (SMS&MMS) மற்றும் காட்சிப் பதிவுகள் (Video) உடனடியாக பறிமுதல்  செய்யப்பட்டு சிறப்பு சைபர் க்ரைம் போலீஸிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
  5. போலியான மற்றும் தவறான புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் தொலைபேசிகள் வழியாக பரவுவது கலவரத்தை மேலும் தூண்டுவதால் இவைகள் தடுத்து நிறுத்தப்பட்டு குற்றவாளிகள் மீது உறுதியான் நடவடிக்கைகள் எடுப்பதோடு இவைகள் பதிவு செய்யப்படுதல் வேண்டும். நடவடிக்கைகள் இவைகள் மேலும் பரவாமல் இருக்கக்கூடிய வகையில் ஆவணஞ் செய்யப்பட வேண்டும்.
6.     கற்பழிப்பு வழக்குகள் சிறப்பு வழக்குகளாக மேற்க்கொள்ளப்பட வேண்டும். மேலும் கற்பழிப்பு குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மீது சிறப்பு கவனமும், ஆறுதல்கள், ஆலோசனைகள் மற்றும் மருத்துவமனைகள் நடைமுறைக்கேற்றவாறு மருத்துவ மற்றும் மனோதத்துவ ரீதியில் மேற்க்கொள்ளப்பட வேண்டும்.
இந்த வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகள் (FIR) கற்ப்பழிப்பு குற்றங்களாகவே பதியப்படல் வேண்டும். விசாரணைகள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாநில அரசு செயல்படல் வேண்டும்.
கற்ப்பழிப்பு குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பயத்தின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு, சமூக அடக்குமுறை காரணமாகவும் உண்மையை வெளிச்சொல்ல தயங்குவதால் சிறப்பு பெண்கள் குழுவின் விசாரணை அறிக்கைகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு உண்மைகளை வெளிக்கொண்டுவர பயன்பாடு செய்யப்படவேண்டும்.
7.ஜாட் குண்டர்கள் மட்டுமல்லாமல் வன்முறைக்கு ஆதரவளித்து தவறு செய்த காவல்துறையினரும் வரிசைப்படுத்தப்பட்டு ஒழுக்க மற்றும் தண்டனை நடவடிக்கைகள் காவல்துறை அதிகாரிகள் மீது தொடங்கப்பட வேண்டும். ஒரு சார்பாகவும், வெறுப்பு மனப்பான்மையிலும் இயங்கிய காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யப்பட்டு அவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் கடுமையான முறையில் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
8.மகா பஞ்சாயத் குழுவில் செயல்பட்ட குற்றவாளிகள் எந்த வெறுப்பும், தயக்கமும் இல்லாமல் தண்டிக்கப்பட வேண்டும். வன்முறைகள் நடைபெற மறைமுகமாக சதி செய்த அரசியல் தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
9.போதுமான அளவு மருத்துவர்கள், பெண் ஏட்டுக்கள் நிவாரண முகாம்களில் பணியமர்த்தப்படல் வேண்டும்.
10.இனம் சார்ந்த இலக்கு வன்முறை மசோதாவை விரைவார்ந்த முறையில் சட்டமியற்ற வேண்டும்.
11.  திருட்டுத்தனமாக பதுக்கப்பட்ட ஆயுதங்கள் கண்டெடுத்து பறிமுதல் செய்து அவற்றிற்காண உரிமங்கள் தடை செய்யப்படல் வேண்டும்.
12.  வீடுகள் எரிக்கப்பட்டு பணங்கள் நகைகள் சூறையாடப்பட்டு பொருளாதார ரீதியான் கடும் இழப்புகளை சந்தித்து ஜோலா முகாம்களில் வாழும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்த இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.
13.  பாதிக்கப்பட்டவர்களான புகுனா, பந்தி, லாக், ஹஸன்பூர் மற்றும் மங்பூரி கிராமத்தை சார்ந்தவர்கள் தங்களது இயல்பு நிலைக்கு திரும்பி சமூக நல்லிணக்கத்தோடு வாழ்வதற்கான விரைவான உறுதியான நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்படல் வேண்டும்.
14.  பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆடை உற்பத்தி தொழில் செய்யும் தொழிலாளர்களாக இருப்பதால் மீண்டும் தங்களது வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்ள போதுமான வசதிகளுடன் உறுதியான மற்றும் தகுந்த திட்டங்கள் ஏற்ப்படுத்துதல் வேண்டும்.
15.  நிறைய கிராமத்தவர்கள் தங்களின் வீடுகள் மீண்டும் கட்டித் தரப்படவும், தங்களுடைய குழந்தைகளுக்கு அரசு வேலைகள் தரப்படவும் கோருகின்றனர். நிவாரண நடவடிக்கைகள் கணிவான முறையில் அந்த மனக்குறையை நிவர்த்தி செய்யும் வண்ணம் இருத்தல் வேண்டும்.
16.  கலவரத்தால் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு கவனம் அளிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான இழப்பீடுகளை போதிய அளவில் வழங்குதல் வேண்டும்.
17.  முகாம்களில் அதிகமான் நாட்களில் பாதுகாப்ப்பின்மையும், உணவுப் பற்றாக்குறையின் காரணமாகவும் பட்டினி மேற்கொள்வதால் போதுமான அளவு உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் வழங்குதல் வேண்டும்.
18.  சிறப்பு விசாரணை குழுவினால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின்(FIR) மீது வேகமான மற்றும் சரியான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்படவும், கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்பூர்வமான தீர்வுகள் தரப்படவும் வேண்டும்.
19.  மஹா பஞ்சாயத்து குழுக்கள் காவல் மற்றும் உளவுத்துறையினாலும் சட்டத்தினாலும் மற்ற காவல் பிரிவுகளாலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
மஹா பஞ்சாயத்து மற்றும் அதுபோன்ற செயல்திட்டம் கொண்ட குழுக்களின் அரசியல் தொடர்புகள் துண்டிக்கப்பட வேண்டும். இதன் மூலம் ஒடுக்கப்பட்ட மற்றும் ஏழ்மையான சமூகத்தின் பகுதியினரின் நல்வாழ்வுக்காண உறுதியான அடைப்படையான நடவடிக்கைகள் மேற்க்கொள்ள வேண்டும், மேலும் கலவரத்திற்கு மறைமுகமாக உதவிய அரசியல் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
20.  பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான மருத்துவ உதவிகள் பராமரிப்புகள் செய்யப்பட்டு அவர்கள் மிகுந்த கவனத்துடனும் உரிய பராமரிப்புடனும் நடத்தப்படுதல் வேண்டும்.
21.  சிறுபான்மையினர் அதிகமாக வாழும் பகுதிகளில் சச்சார் கமிட்டியின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்துதலுக்கான முக்கியமான கால கட்டமாக செயல்படுத்துதல் வேண்டும்.
22.  காணாமல் போனவர்களை உரிய இடங்களில் சேர்ப்பதற்கு ஆவண செய்தல் வேண்டும். பெண்களுக்கு எதிராகவும், குழந்தைகளுக்கு எதிராகவும் அருவருக்கத்தக்க முறையில் நடந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
23.  மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மரியாதைக்குரிய வகையில் கல்வி கற்பதற்கான் வழிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.
24.  முஸ்லிம்களுடைய  பகுதிகள் மிகவும் அடைப்படை வசதிகளான மருத்துவமனை கல்வி கூடங்கள் சாலை வசதிகள் மற்றும் சில் அடிப்படை வசதிகளுடன் கட்டமைக்கப்பட வேண்டும்.
25.  முஸ்லிம்களில் இன்னும் பயம்தோய்ந்த மனநிலையில் இருப்பதால் அரசு அவர்களின் விசயத்தில் நம்பிக்கையை ஏற்ப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களின் விசயத்தில் நம்பிக்கை ஏற்ப்படுத்தும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்றால் அவர்கள் தங்களது இயல்பு வாழக்கைக்கு திரும்புவது இயலாமல் போய்விடும்.
26.  நேர்மையான நடுநிலை தவறாத மற்றும் உண்மையுள்ள காவல் துறையினர் போதுமான அளவு அகதிகள் முகாம்களின் பிரச்சனைக்குரிய மற்றும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வழும் பகுதிகளில் பணியமர்த்தப்படல் வேண்டும். அதில் போதுமான அளவு முஸ்லிம் காவல்துறையினரும் நிறுத்தப்படல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக