வெள்ளி, டிசம்பர் 13, 2013

டெல்லி:தலித் கிறிஸ்தவ-முஸ்லிம் அமைப்புகள் நடத்திய பேரணியில் போலீஸ் தடியடி!

தலித் கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் அட்டவணை சாதியினர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்கக்கோரி பல்வேறு தலித் கிறிஸ்தவ,முஸ்லிம் அமைப்புகள் டெல்லியில் நடத்திய பேரணியில் போலீஸ் அராஜகத்தை அரங்கேற்றியுள்ளது. பேரணியில் கலந்துகொண்டவர்கள் மீது போலீஸ் தடியடிநடத்தி தண்ணீரை பீய்ச்சி அடித்தது.
இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிக்காத மத்திய அரசை கண்டித்து நேசனல் கவுன்சில் ஆஃப்  தலித் கிறிஸ்டியன்ஸ், சி.பி.சி.ஐ, நேசனல் கவுன்சில் ஆஃப்  சர்ச்சஸ்  இன் இந்தியாஆகிய அமைப்புகளின் தலைமை, முஸ்லிம் அமைப்புகளுடன் இணைந்து பாராளுமன்றம்நோக்கி பேரணியை நடத்தியது.டெல்லி ஆர்ச் பிஷப் அனில் ஜே.டி.குட்டோ,ஃபரீதாபாத் ஆர்ச் பிஷப் மார் குரியாகோஸ், பிஷப்புகளான நீதிநாதன்,இக்னேஷிய  மஸ்கிரினாஸ், கீவர்கீஸ் மார் குரிலோஸ், ஜோ தயாள், ஃபாதர் ஆரோக்கியதாஸ், ஃபாதர் சுனில் ராஜ் ஃபிலிப் ஆகியோர் பேரணிக்கு தலைமைதாங்கினர்.பேரணியில் கலந்துகொண்டோர் ஆத்திரமூட்டும் செயல்களில்ஈடுபடவில்லை.ஆனால், போலீஸ் அராஜகமாக தடியடியை துவக்கியது. பேரணியில்கலந்துகொண்ட பிஷப்புகள் உள்ளிட்டோரை போலீஸ் கைதுச் செய்தது. பின்னர் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று தெரிவித்ததைத் தொடர்ந்து கைதுச் செய்யப்பட்ட ஆர்ஷ் பிஷப் உள்ளிட்டோர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே செல்ல ஒப்புக்கொண்டனர்.இன்று காலை பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக