மஹராஷ்ட்ரா மாநிலத்தில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்துவந்த சமூக ஆர்வலர் நரேந்த்ர தபோல்கரைக் கொலைச் செய்த வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையைச் சேர்ந்த, துல்லியமாக துப்பாக்கி சுடும் திறன் பெற்ற அவர்கள் இருவரையும் கோவாவுக்கு அருகே விருந்து நடைபெற்ற ஓரிடத்தில் டிசம்பர் 3 ஆம் தேதி கைது செய்ததாகவும், உடனடியாக புனேவுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் போலீஸ் அதிகாரி ஓ.பி. மிஷ்ரா தெரிவித்தார். இருப்பினும் அவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
புனே நகரில், காலை-நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில், அற்புதங்களை நிகழ்த்துவதாக கூறிவரும் சாமியார்களையும் ஆன்மீக குருமாரையும் எதிர்த்து சில தசாப்தங்களாகவே தபோல்கர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார். அவரது கொலை, நாடு முழுவதிலும் மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மேலும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியிருந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக