ஒட்டுக் கேட்டல், பின் தொடருதல், 24 மணி நேரமும் கண்காணிப்பில்
வைத்திருத்தல் போன்றவை, உளவு பார்ப்பதின் ஒரு பகுதி. குடும்பம்,
தனிச்சொத்து, அரசு என்ற அமைப்புகள் தோன்றியதிலிருந்தே, உளவும் ஒரு அங்கமாக
இருந்து வருகிறது. ரோமானிய சாம்ராஜ்யத்திலேயே உளவு பார்ப்பது இருந்து
வருகிறது. இந்தியாவில் சந்திரகுப்தர் சாம்ராஜ்யத்தில் உளவுக்கு மிக
முக்கியமான பங்கு இருந்தது வரலாற்று சான்றுகளில் இருந்து தெரிய வருகிறது.
திருவள்ளுவர், உளவு பார்ப்பதன் முக்கியத்துவம் குறித்து ஒற்றாடல் என்ற தனி
அதிகாரம் மூலமாக விளக்குகிறார்.
உளவு, ஒற்று ஆகியவற்றுக்கு, அரசுகள் முக்கியத்துவம் அளித்து வந்தாலும்
நாகரீகம் வளர வளர, தனி மனித சுதந்திரத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டது.
ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில், தனி மனித சுதந்திரத்துக்கு அதிக அளவு
முக்கியத்துவம் அளித்து, பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்தியாவிலும்,
வாழும் உரிமை என்ற அடிப்படை உரிமையின் ஒரு அங்கம், தனி மனித சுதந்திரம்
என்று உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளில் உணர்த்தப்பட்டுள்ளது.
1975ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில், காவல்துறை
பின்தொடர்வது தொடர்பாக ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒரு வழக்கில்
தண்டிக்கப்பட்ட ஒருவரை, காவல்துறை காலை மாலை, இரு வேளையும் பின் தொடர்வதை
எதிர்த்து அவர் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய
உச்சநீதிமன்றம், பின்தொடர்வது என்பது (Surveillance) குற்றம் இழைக்கக்
கூடிய வாழ்க்கையை வாழ்வது என்று முடிவெடுத்தவர்கள், ஒருவரின்
செயல்பாடுகளால், பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும், என்று உறுதியான
ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே பின்தொடர்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட
வேண்டும். ஒருவர் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்
என்பதற்காகவே, அவர் வீட்டுக்கு காவல்துறை செல்வது என்பதை ஏற்றுக் கொள்ள
முடியாது. தனி மனித சுதந்திரத்தை பறிக்கும் இது போன்ற சட்டங்களை மாற்ற,
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தொலைபேசியை பயன்படுத்தும், சுதந்திரப்
போராட்ட தலைவர்களைப் பற்றி தகவல் தெரிந்து கொள்வதற்காக பரவலாக தொலைபேசிகளை
ஒட்டுக் கேட்கும் பழக்கம் இருந்தாலும், அவற்றையும் நெறிமுறைப் படுத்த,
பிரிட்டிஷ் அரசு சட்டம் இயற்றியது. அந்தச் சட்டம்தான் Indian Telegaraphs
Act, 1885.
அந்தச் சட்டத்தின்படி, ஒரு மாநில அரசோ, மத்திய அரசோ, இந்தியாவின்
ஒருமைப்பாட்டு மற்றும் இறையாண்மை குறித்தும், வெளிநாடுகளோடு உள்ள உறவு
குறித்தும், பொது அமைதி குறித்தும், ஒரு குற்றச் செயல் இழைக்கப்படுவது
குறித்தும், எழுத்து பூர்வமான காரணங்களை பதிவு செய்த பிறகு, ஒரு செய்தியை
இடைமறிக்கலாம் என்று கூறுகிறது. இந்த சட்டப்பிரிவை மதிக்காமல், பல்வேறு
தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக, மக்கள் சிவில் உரிமைக் கழகம், 1996ம்
ஆண்டு, உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தது.
அந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், “தொலைபேசி உரையாடல்கள்
பெரும்பாலான நேர்வுகளில் ரகசியமானதாகவும், தனிப்பட்டவையானதாகவும்
இருக்கின்றன. இன்றைய நாகரீக காலகட்டத்தில், தொலைபேசி உரையாடல்கள் ஒரு
மனிதனின் வாழ்வில் அங்கமாக மாறி விட்டன. தற்போது பலர், மொபைல் போன்களை
தங்களோடு எடுத்துச் செல்கறிர்கள். தனி மனித உரிமை என்பது, தொலைபேசி
உரையாடல்களை ரகசியமாக மேற்கொள்வதையும் உள்ளடக்கியது. சட்டவிரோதமாக ஒட்டுக்
தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவது, பேச்சுரிமை என்பது, அரசியல்
சட்டப்பிரிவு 19 (1) (a)ன் கீழ் அடிப்படை உரிமையாகக்கப்பட்டுள்ளது. ஒருவர்
தன் கருத்துக்களையும் நம்பிக்கைகளையும், வாய்மொழியாகவோ, எழுத்து
பூர்வமாகவோ, அச்சிடுவதன் மூலமாகவோ, படமாகவோ, அல்லது வேறு வடிவத்திலோ
வெளியிடுவதை இந்த உரிமை உறுதி செய்கிறது. ஒரு நபர் தொலைபேசியில்
பேசுகையில், அவர் இந்த உரிமையின் அடிப்படையிலேயே பேசுகிறார். சட்டபூர்வ
அங்கீகாரம் இல்லாத தொலைபேசி ஒட்டுக் கேட்பு என்பது அரசியல் சட்டப்பிரிவு 19
(1) (a)வையும் மீறுவதாகும்.
இதனால், இது குறித்த பின்வரும் வழிகாட்டுதல்களை பிறப்பிக்கிறோம்.
1)மத்திய அல்லது மாநில அரசின் உள்துறைச் செயலாளர்களின் எழுத்துபூர்வமான
உத்தரவின் படி மட்டுமே, தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட வேண்டும். அவசர
காலங்களில், உள்துறைச் செயலாளரின் அதிகாரம், இணைச் செயலர் அந்தஸ்தில் உள்ள
அதிகாரியிடம் வழங்கலாம்.
2) தொலைபேசியை ஒட்டுக் கேட்கும் நபரிடம், அதற்கான உத்தரவு
எழுத்துபூர்வமாக வழங்கப்பட வேண்டும். ஒட்டுக் கேட்கப்படும் தகவல், எவ்வாறு
வழங்கப்பட வேண்டும் என்பதையும் அதில் குறிப்பிட வேண்டும்.
3) ஒட்டுக்கேட்பைத் தவிர்த்து, வேறு வகையில் அந்த தகவலை சேகரிக்க முடியாது என்பதற்கான காரணத்தை, பதிவு செய்ய வேண்டும்.
4) எந்த முகவரியிலிருந்து எந்த முகவரிக்கு செல்லும் செய்தியை (தொலைபேசி எண்கள்) தெளிவாக குறிப்பிட வேண்டும்.
5) புதுப்பிப்பு செய்யப்பட்டாலே ஒழிய, இந்தச் சட்டத்தின் கீழ்
பிறப்பிக்கப்படும் ஆணை, இரண்டு மாத காலத்துக்குப் பிறகு காலவதியாகி விடும்.
உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரி, இரண்டு மாத காலத்துக்குப் பிறகு, எப்போது
வேண்டுமானாலும், புதுப்பிக்கலாம். உத்தரவு பிறப்பித்த இரண்டு
மாதத்துக்குள்ளாக, உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை இதற்கான
குழு ஆராய வேண்டும். இதில் விதி மீறல்கள் உள்ளதா என்றும் ஆராயவேண்டும்.
அவ்வாறு ஆராய்கையில், விதி மீறல்கள் இருப்பது தெரிய வந்தால், ஒட்டுக்
கேட்பதற்கான உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்ப்டடுவதோடு,
ஒட்டுக்கேட்க்கப்பட்ட விஷயங்கள் அத்தனையும் அழிக்கப்பட வேண்டும். ஒட்டு
மொத்தமாக ஆறு மாத காலத்துக்கு மேலாக எந்த தொலைபேசியும் ஒட்டுக்கேட்கப்படக்
கூடாது.
6) ஒட்டுக் கேட்கப்பட பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் தொடர்பான பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும்.
7) தேவையான பயன்பாட்டுக்கு மட்டுமே, ஒட்டுக் கேட்கப்பட்ட பதிவுகள் பயன்படுத்தப்பட வேண்டும்.
8) தேவையான காலத்துக்குப் பிறகு, ஒட்டுக்கேட்கப்பட்ட விஷயங்கள் அழிக்கப்பட வேண்டும்.
9) மத்திய கேபினெட் செயலர், சட்டச் செயலர், தொலைத் தொடர்புத் துறை
செயலர் ஆகியோர் அடங்கிய சீராய்வுக் குழு, இந்த ஒட்டுக்கேட்பை ஆய்வு செய்ய
வேண்டும். மாநிலத்தைப் பொறுத்தவரை, தலைமைச் செயலாளர், சட்டச் செயலாளர்,
உள்துறை செயலாளர் அல்லாத இதர துறை செயலாளர் ஆகியோர், அடங்கிய குழு ஆராய
வேண்டும். “ஒரு தொலைபேசியை ஒட்டுக் கேட்பதற்கு இத்தனை நிபந்தனைகளை மாநில அரசோ மத்திய அரசோ பின்பற்ற வேண்டும்.
இந்தப் பின்னணியில்தான், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் உத்தரவின்
பேரில், குஜராத் காவல்துறையின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு உட்பட, பல்வேறு
பிரிவுகளின் காவல்துறையினர் ஒரு பெண்ணை பின்தொடர்ந்து அவர், தொலைபேசியை
ஒட்டுக் கேட்ட விவகாரத்தைப் பார்க்க வேண்டும்.
நரேந்திர மோடி என்ற நபர், இந்தியாவை ஆளப்போகிறவர் என்று பிஜேபி கூறி
வருகிறது. எப்படிப்பட்ட நபர் இந்த நரேந்திர மோடி என்பதை, கோப்ராபோஸ்ட் டாட்
காம் மற்றும், குலேய்ல் டாட் காம் ஆகிய இணையதளங்கள் வெளிச்சம் போட்டுக்
காட்டியுள்ளன. குஜராத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஏ.எல்.சிங்கால் என்பவர்,
சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்த ஒலி நாடாக்கள், ஒரு பெண், குஜராத் மாநில
காவல்துறையால் எப்படியெல்லாம் பின் தொடரப்பட்டார், அவர் தொலைபேசி
எப்படியெல்லாம் ஒட்டுக் கேட்கப்பட்டது, அந்தப் பெண்ணின் தாயார்
சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது கூட விடாமல்
காவல்துறையினர் எப்படி பின்தொடர்ந்தனர் என்பதை விளக்குகிறது.
யார் அந்தப் பெண்.... ? எதற்காக மோடி அந்தப் பெண்ணை காவல்துறை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார் ?
ப்ரான்லால் சோனி என்பவரின் மகள்தான் அந்த மர்மப் பெண். இவருக்கு இரண்டு
சகோதரர்கள். ஹரித் சோனி மற்றும் சிந்தன் சோனி. இவர்கள் மூவரும் சேர்ந்து
தொடங்கும் நிறுவனம்தான் ஈக்விலிபிரியம். நவம்பர் 2008ல் தொடங்கப்பட்ட இந்த
நிறுவனம், சோலார் எனர்ஜி மற்றும் மின்பகிர்மான நிறுவனம். போனியாகமலேயே
இருந்த இந்த நிறுவனத்துக்கு, குஜராத் தலைமைச் செயலக கட்டிடமான
சச்சிவாலயாவில் ஒரு மின் பகிர்மான கருவி நிறுவும் ஆணை கிடைக்கிறது.
அதற்குப் பின் இந்த நிறுவனத்துக்கு சுக்கிர திசைதான்.
அந்த குஜராத் அரசின்
சச்சிவாலயா கட்டிடத்தின் நிர்வாகம் தொடர்பான அனைத்து பொறுப்புகளும்,
நரேந்திர மோடியின் கீழ் வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது. பிசினெஸ்
ஸ்டான்டர்ட் பத்திரிக்கைக்கு ஜுன் 2013ல் பேட்டியளித்த, அந்தப் பெண்ணின்
சகோதரர் “எங்கள் பிசினெசின் வளர்ச்சிக்கு என் தங்கை குறிப்பிடத்தக்க உதவி
செய்தார்” என்று குறிப்பிட்டுள்ளார். சரி.. குஜராத் தலைமைச் செயலகத்தில்
ஒரு மின் பகிர்மான கருவி நிறுவும் ஒரு நிறுவனத்தின் இயக்குநரை, குஜராத்
முதல்வர் எதற்காக பின் தொடர வேண்டும் ? ஒட்டுமொத்த காவல்துறையையும்
எதற்காக அவர் பின்னால் அலைய விட வேண்டும்.. 24 மணி நேரமும், அந்தப் பெண்,
யாரிடம் பேசுகிறார், எங்கே செல்கிறார் என்பதை எதற்காக கண்காணிக்க வேண்டும் ?
இதற்கான விடை, பிரதீப் சர்மா என்ற ஐஏஎஸ் அதிகாரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு வாக்குமூலத்தில் கிடைக்கிறது.
“2003 மற்றும் 2006ம் ஆண்டுக்குள்,
நான் கட்ச் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, பூஜ் நகரை அழகுபடுத்தும் பல்வேறு
திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு மலைப்பூங்காவை அமைக்கும் திட்டம்
மேற்கொள்ளப்பட்டு, பெங்களுரிலிருந்து ஒரு ஆர்க்கிடெக்ட்
தேர்ந்தெடுக்கப்பட்டார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அந்தப்
பூங்காவை திறந்து வைத்தார். அந்தப் பூங்காவை திறந்து வைத்தபோது, அதை
உருவாக்கிய ஆர்க்கிடெக்டான பெண்ணோடு அறிமுகப்படுத்தப்பட்டார் மோடி. அதன்
பின்னர் நான் பெங்களுருக்கு திரும்புகிறேன் என்று அந்தப் பெண் கூறினார்.
மோடி அந்தப் பெண்ணோடு நெருக்கமான விவகாரம, எனக்குத் தெரியும். ஒரு
விழாவில், மோடியும் அந்தப் பெண்ணும் நெருக்கமாக பேசிக்கொண்டிருந்த்தை நான்
கேட்க நேர்ந்தது. அந்தப் பெண் பின்னொரு நாளில் என்னோடு
பேசிக்கொண்டிருக்கையில், அவர் எப்போது மோடியை அழைத்தாலும், உயர்
அதிகாரிகளோடு முக்கிய விவாதத்தில் இருந்தாலும் அதை அப்படியே விட்டு விட்டு
வருவார் என்பதை சொன்னார்.
2006ம் ஆண்டு மார்ச் இரண்டாவது வாரத்தில் மாலை சுமார் 5 மணியளவில்,
அந்தப் பெண், என்னை அழைத்து, தற்போதுதான் அஹமதாபாத்தில் வந்து
இறங்கியிருப்பதாகவும், பூஜ் நகருக்கு செல்ல இருப்பதாகவும் கூறினார்.
அந்தப் பெண்ணை நான் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அடுத்த 48 மணி
நேரத்துக்கு அந்தப் பெண்ணின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இரண்டு நாட்கள் கழித்து காலை 11 மணியளவில், என்னை அழைத்து கடந்த இரண்டு
நாட்களாக மோடியின் வீட்டில் இருந்ததாக கூறியதோடு, பூஜ் நகரில் என்னை
சந்தித்து பல்வேறு விபரங்களை தெரியப்படுத்தினார்.
பின்னர் அந்தப் பெண், மறுநாள் ஹோலிப் பண்டிகை என்றும், மோடியை
சந்திக்கப் பலர் வந்தார்கள் என்றும், அவர்களோடு சில நேரம் மோடி பேசி விட்டு
வீட்டுக்கு திரும்பி விட்டார் என்றும் அந்தப் பெண் தெரிவித்தார்.
இதற்கிடையே அந்தப் பெண்ணுக்கு காய்ச்சல் வந்ததால், மருத்துவரின் உதவியை
கேட்டார். மோடி மருத்துவரை அழைப்பது கடினம் என்று தெரிவித்து
வதோத்ராவுக்கு அந்தப் பெண்ணை ஒரு காரில் அனுப்பி வைத்தார்.
நவம்பர் 2008ல் நான் பாவ்நகர் நகராட்சி ஆணையராக இருந்தபோது, அந்தப்பெண்
என்னை தொடர்பு கொண்டு, ஆலங் கப்பல் தளத்தில் ஒரு திட்டத்தை
செயல்படுத்துமாறு, மோடி அவரை கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார். இது
தொடர்பாக பாவ் நகருக்கு வர விரும்புவதாகவும் தெரிவித்தார். பாவ்நகருக்கு
அந்தப்பெண் வந்தபோது, தென் ஆப்ரிக்காவில் இந்த மோடியோடு அவர் தொடர்ந்து
தொடர்பில் இருப்பது தெரிய வந்தது. மோடி என்னைப் பற்றி விசாரித்தார்
என்றும், அந்தப் பெண்ணுக்கும் மோடிக்குமான நெருக்கமான தொடர்பு எனக்கு
தெரியுமா என்று மோடி விசாரித்தார் என்றும் அந்தப் பெண் தெரிவித்தார்.
மோடியின் தனிப்பட்ட செல்பேசியிலிருந்து (9909923400) மோடி அந்தப்
பெண்ணுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை அவர் எனக்குக் காட்டினார். அந்த
எண்ணை நான் எனது செல்பேசியில் பதிவு செய்து வைத்திருந்தேன். ஒரு முறை,
தவறுதலாக, மோடியின் தனிப்பட்ட எண்ணுக்கு அழைப்பு விடுத்து விட்டேன். ஆனால்
மறுமுனையில் பதில் இல்லை. ஆனால், தவறுதலாக அழைத்த அந்த எண் யாருடையது
என்று கண்டறிந்த மோடி, எனது எண்ணை ஒட்டுக் கேட்க உத்தரவிட்டார். அந்தப்
பெண் என்னோடு அடிக்கடி தொலைபேசியில் பேசுவதை மோடி அறிந்து கொண்டார். இந்த
நேரத்தில் அந்தப் பெண்ணும், வேறொரு நபரும் மோசமான நிலையில் இருந்த ஒரு ஆபாச
வீடியோ இணைய தளத்தில் இருப்பதாகவும், அந்தப் பெண்ணோடு தொடர்பு கொள்ள
வேண்டாம் என்றும் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அப்படி ஒரு வீடியோவை நான்
பார்க்கவும் நேர்ந்தது. ஆனால், மோடி, தானும், அந்தப் பெண்ணும் இருப்பது
போன்ற வீடியோ இருப்பதாகவும், அதற்கு நான்தான் காரணம் என்றும் நம்பத்
தொடங்கினார்."
இதுதான் பிரதீப் சர்மா தாக்கல் செய்த மனுவின் ஒரு பகுதி. இந்த மனு
தாக்கல் செய்யப்பட்டது 2011ல். மோடி அந்தப் பெண்ணை பின்தொடர உத்தரவிட்டது
2009ல். அந்த உரையாடல்கள் இணையதளத்தில் வெளியானது நவம்பர் 2013ல். 2011ல்
இப்படி ஒரு மனுவைத் தாக்கல் செய்த பிரதீப் சர்மாவுக்கு இப்படி ஒரு உரையாடல்
இருந்த விபரமே தெரியாது. தன்னைப் பற்றிய விபரங்களை பிரதீப் சர்மா அறிந்து
கொண்டார் என்றதுமே, நரேந்திர மோடி அவர் மீது ஊழல் வழக்கு தாக்கல் செய்து 18
மாதங்கள் அவரை சிறையில் வைத்திருந்தார். தன் மீது மோடி பழிவாங்கும்
வகையில் வழக்கு தாக்கல் செய்கிறார் என்ற காரணத்தினாலேயே, பிரதீப் சர்மா,
மோடி குறித்த தகவல்களை உச்சநீதிமன்றத்தில் வாக்குமூலமாக தாக்கல்
செய்கிறார்.
இப்போது இந்த உரையாடல் எப்படி வெளி வந்தது ? மோடியின் நம்பிக்கைக்குப்
பாத்திரமான குஜராத்தின் முன்னாள் உள்துரை அமைச்சர் அமீத் ஷா மற்றும்
காவல்துறை அதிகாரி ஏ.எல்.சிங்கால் இடையே நடைபெற்ற உரையாடல்கள்தான் தற்போது
வெளிவந்து மோடிக்கு பெரும் சிக்கலாக அமைந்துள்ளன. ஜி.எல்.சிங்கால் என்ற
அதிகாரி, கருணாநிதிக்கு எப்படி ஜாபர் சேட்டோ, அப்படி அமீத் ஷாவுக்கு
இருந்து வந்தார். ஜி.எல்.சிங்கால்.
ஜி.எல்.சிங்கால்
இந்த ஜி.எல்.சிங்கால், இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டரில் முதலில் கைது
செய்யப்பட்ட காவல்துறை உயர் அதிகாரி. சிபிஐ வழக்கில் கைது செய்யப்பட்டு,
பெரும் சிக்கலில் மாட்டிய சிங்கால், என்றாவது ஒரு நாள் நாம் மாட்டிக்
கொண்டால் என்ன செய்வது என்று கருதி, சட்டவிரோதமாக உள்துறை அமைச்சர்
தொலைபேசி மூலமாக கொடுத்த உத்தரவுகள் மற்றும் இஷ்ரத் ஜஹான் என்கவுன்டர்
வழக்கை எப்படி இழுத்து மூடுவது என்று, அரசு வழக்கறிஞர், தலைமைச் செயலாளர்
உள்ளிட்டோர் நடத்திய சதித்திட்டங்கள் ஆகியவற்றை பதிவு செய்து
வைத்திருந்தார். சிபிஐ தன்னைக்கைது செய்ததும், தன்னையும், தனக்குக் கீழ்
பணியாற்றும் அதிகாரிகளையும் ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்ற
ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்த ஒலிநாடாக்களை சிபிஐ வசம் ஒப்படைத்தார்.
அந்த ஒலிநாடாக்களே இப்போது ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
இந்த ஒலிநாடாக்கள் எழுப்பும் கேள்விகள் ஆயிரம்.... ஆயிரம்..
உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றங்களும், வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை
மோடி போன்ற நபர்கள் எப்படி காற்றில் பறக்க விடுகிறார்கள் என்பதற்கு, இந்தச்
சம்பவம் ஒரு சிறந்த உதாரணம். மோடி அடுத்த பிரதமராகும் கனவில் இருப்பவர்
என்பதால், இந்த சம்பவம் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
மோடியோடு
இணக்கமாக செல்லாத உயர் உயர் அதிகாரிகளுக்கு என்ன கதி என்பது, சஞ்சீவ் பட்,
டிஜிபி ஸ்ரீகுமார் ஆகியோரை நரேந்திர மோடி என்ன செய்தார் என்பதிலிருந்து
அறிந்து கொள்ளலாம். குஜராத் கலவரத்துக்கு காரணமானவரே மோடிதான். கோத்ரா
கலவரத்தில் எரிக்கப்பட்ட உடல்களை ஊர்வலமாக அகமதாபாத்தில் எடுத்துச் சென்று
கலவரத்துக்கு வித்திட்டவர் மோடி என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
செய்தவர் சஞ்சீவ் பட்.
சஞ்சீவ் பட், 1988ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட
ஐபிஎஸ் அதிகாரி. சஞ்சீவ் பட்டின் டிரைவரான ஒரு கான்ஸ்டபிளை சஞ்சீவ் பட்
மிரட்டினார் என்ற புகாரின் பேரில், சஞ்சீவ் பட், குஜராத் அரசால் கைது
செய்யப்பட்டார்.
மோடி அரசுக்கு குஜராத் கலவரத்தில் இருந்த பங்கு என்ன என்பது குறித்து,
நானாவதி ஷா கமிஷன் முன்பாக சாட்சியம் அளித்த காரணத்துக்காக, ஸ்ரீ குமார்
என்ற அதிகாரிக்கு டிஜிபி பதவி உயர்வு வழங்காமல் தடுத்தார் நரேந்திர மோடி.
ஸ்ரீ குமார்
குஜராத் கலவரத்தின்போது, பாவ் நகரில், ஒரு இடத்தில் பதுங்கியிருந்த
300க்கும் மேற்பட்ட முஸ்லீம் குழந்தைகளைத் தாக்க இந்து வெறியர்களின்
கூட்டம் வந்தபோது, அந்தக் கூட்டத்தை நோக்கி சுட்டு அந்தக் குழந்தைகளைக்
காப்பாற்றியவர் ராகுல் சர்மா என்ற அதிகாரி. உடனடியாக அந்த இடத்திலிருந்து
மாற்றப்படடார் ராகுல் சர்மா. மாற்றப்பட்ட ராகுல் சர்மாவை, நரோடா பாட்டியா
கலவர விசாரணையில் உதவுமாறு, அப்போதைய குஜராத் டிஜிபி பி.பி.பாண்டே
உத்தரவிட்டார். அதன்படி, அந்தக் கலவர விசாரணையில் இறங்கிய ராகுல் சர்மா,
கலவரம் நடந்த சமயத்தில், அந்த இடத்தில் பயன்பாட்டில் இருந்த அத்தனை
தொலைபேசிகளின் பட்டியல் மற்றும் விபரங்களை வாங்கி, டிஜிபிக்கு அளித்தார்.
டிஜிபிக்கு அளிக்கும்போதே, தனிப்பட்ட முறையில் ஒரு நகலை எடுத்து வைத்துக்
கொண்டார். டிஜிபிக்கு அனுப்பிய விபரங்கள் மர்மமான முறையில் காணாமல்
போனதும், அப்போது விசாரணை நடத்திய பானர்ஜி கமிஷன் மற்றும் நானாவதி கமிஷன்
முன்பாக அந்த விபரங்களை சமர்ப்பித்தார்.
ராகுல் சர்மா வழங்கிய அந்த
விபரங்களே, குஜராத் அமைச்சர் மாயா கோட்னானி மற்றும் விஎச்பி தலைவர் ஜெயதீப்
படேலின் கைதுக்கும் தண்டனைக்கும் காரணமாக அமைந்தது. இந்த ராகுல் சர்மா,
சட்டவிரோதமாக அரசு ரகசியங்களை வெளியிட்டதற்காக, துறை ரீதியான நடவடிக்கைக்கு
ஆளானார். அவர் வெளியிட்ட அந்த அரசு ரகசியங்கள் எது தெரியுமா ? கலவரம்
தொடர்பாக இவர் சேகரித்து விசாரணை ஆணையத்திடம் சமர்பித்த தொலைபேசி
பட்டியல்கள். இத்தோடு இவரை விடவில்லை. தனக்குக் கீழ் பணியாற்றிய
காவலர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு 100 ரூபாய் விருது வழங்கியதற்காக
மற்றொரு துறை நடவடிக்கை எடுக்கப்பட்டது,
ராகுல் சர்மா
சதீஷ் சந்திர வர்மா என்ற திகாரி, குஜராத் கலவரத்தின்போது, வன்முறையை
தூண் விட்ட, பிஜேபி எம்.எல்.ஏ ஷகார் சவுத்ரி என்பவரை கைது செய்தார்.
அப்போது காவல் பயிற்சி பள்ளிக்கு மாற்றப்பட்டு பழிவாங்கப்பட்டார்.
ப்ரஜாபதி போலி என்கவுன்டரில், புலன் விசாரணை நடத்தி, ஐபிஎஸ் அதிகாரிகளை
கைது செய்த ஒரே காரணத்துக்காக ரஜ்னீஷ் ராய் என்ற அதிகாரியின்
ஆண்டறிக்கையில் அவர் சரியாக பணியாற்றாதவர் என்று குறிப்பெழுதி, அவருக்கு
பதவி உயர்வு கிடைக்காமல் செய்தவர் மோடி.
இந்தப் பின்னணியில்தான், நரேந்திர மோடி, பெங்களுரு பெண்ணை பின்தொடர்ந்த
கதையைப் பார்க்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக எதிரிகளை
பின்தொடர்வதும், அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதும், அவர்கள்
தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பதும், பெரும்பாலான அரசுகள் செய்யும் வேலைதான்
என்றாலும், தனிப்பட்ட காரணத்துக்காக, காவல்துறையைப் பயன்படுத்தி ஒரு பெண்ணை
அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி பின்தொடர்ந்த கதை இப்போதுதான் ஆதாரத்தோடு
அம்பலமாகியிருக்கிறது.
இதை பிஜேபி எதிர்கொண்ட விதம்தான் மிகுந்த நகைச்சுவையாக இருக்கிறது.
அந்தப் பெண்ணின் தந்தையை வைத்து, ஒரு கடிதத்தை தேசிய பெண்கள் ஆணையத்தில்
கொடுக்க வைத்துள்ளனர். அந்தக் கடிதத்தில் என் பெண்ணு இரவு நேரத்தில்
வெளியே சென்று வருவதால், நான்தான் குஜராத் முதல்வரிடம் எனது மகளுக்கு
பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டேன். அந்த உரையாடல்களில் வரும்
சாகேப் என்ற வார்த்தை யாரைக் குறிக்கிறது என்று ஊடகங்களில்
விவாதிக்கப்படும்போதே, பிஜேபி இந்த முட்டாள்த்தனத்தை செய்தது. தந்தையின்
வேண்டுகோளின்படி பாதுகாப்பு அளிப்பதென்றால், மனைவியின் மருத்துவ
சிகிச்சைக்கு செல்லும்போது, மருத்துவமனையில் யார் யார் இருக்கிறார்கள்
என்று உளவு பார்ப்பது உட்படவா ?
அமித்ஷா மற்றும் G L சிங்கால் உரையாடல்..
Amit Shah: This evening the person is supposed to leave. That is the info with Sahib, I mean…….
G.L.Singhal: Yes Sir….the lady isn’t it sir?
Amit Shah: Check out what flight it could be in the evening….
G.L.Singhal: Yes sir…. I will check it out
Amit Shah: May be GoAir and has that man reached Bhavnagar ?
G.L.Singhal: Yes sir…he has. I have checked out his location . He reached last night.
Amit Shah: If this girl is going to Mumbai make sure he does not go to Mumbai
G.L.Singhal: Yes sir…..right sir…..
Amit Shah: Did you understand? and check out the evening flight schedule
***
Amit Shah: Singhal Amit here…
G.L. Singhal: Sir……
Amit Shah: Any further leads?
G.L. Singhal: No sir, I have told him he will check and revert
Amit Shah: No because Saheb, has been calling repeatedly
G.L. Singhal: No he will inform me sir, that may take 10 or 15 minutes
Amit Shah: What happened at the airport?
G.L. Singhal: Sir that boy dropped her off and left, our men are still there, another 10 minutes before flight takes off….
Amit Shah: hmmm….
••••
Amit Shah: Singhal… Amit here. Keep a thorough watch .
G.L. Singhal: Sir we have a man posted in the hotel parking area, a man outside and one more man deployed.
Amit Shah: They are still inside
G.L. Singhal: Till now they have not come out so they are probably inside
Amit Shah: Today they are going out for lunch in a hotel.
G.L. Singhal: Right… right
Amit Shah: Saheb received a phone about this.
G.L. Singhal: Ok… ok…
Amit Shah: So watch out as she is going with someone.
G.L. Singhal: Sir…
Amit Shah: It is the boy who is coming to see her.
G.L. Singhal: Ok… ok…
Amit Shah: The fact is that Saheb gets all the information, so the thing is that our loopholes might get found out.
G.L. Singhal: Of course….of course
Amit Shah: So you please…
G.L. Singhal: Sir I will personally go and see the arrangements for myself
Amit Shah: Better you go there once and see for yourself
G.L. Singhal: Sir I am nearby and will reach there in 10 minutes.
Amit Shah: He must have left the instrument there, he was in Mumbai.
G.L.Singhal: Ok Sir…
Amit Shah: You check it out
G.L.Singhal: Sure sir…
Amit Shah: He must have left the phone at home.
G.L.Singhal: Yes yes sir…
Amit Shah: He has an additional number
G.L.Singhal: Yes yes sir…
Amit Shah: I will ask AK Sharma to give it to you
G.L.Singhal: I have taken three numbers from him and two are showing location in Bhavnagar and I have to check the third one.
Amit Shah: Two at Bhavnagar ?
G.L.Singhal: Yes sir
Amit Shah: Check the third also.
G.L.Singhal: Yes I will check it.
Amit Shah: And where is the lady?
G.L.Singhal: She is sitting at Navrangpura near Have More.
Amit Shah:: With that boy only ?
G.L.Singhal: Yes sir. With that boy
Amit Shah:: I want him in jail for as many days as Vanjara has been jailed for.
G.L.Singhal: Yes yes.
Amit Shah: You be courageous and strong.
G.L.Singhal: Undoubtedly sir…
Amit Shah: No matter how big the person, put him in jail
அந்தப் பெண் புகார் தரவில்லை. அந்தப் பெண்ணின் தந்தை என் மகளுக்கு
நான்தான் பாதுகாப்பு கேட்டேன் என்று கூறியுள்ளார். இதில் மற்றவர்கள்
விவாதிக்க என்ன இருக்கிறது என்று கேட்கிறார்கள் பிஜேபியினர். பிஜேபி
ஆட்சிக்கு வந்தால், தனி மனித உரிமைகளுக்கு என்ன விதமான மரியாதை
கொடுக்கப்படும் என்பதற்கு, இவர்களின் இந்த நிலைபாடு ஒரு சிறந்த உதாரணம்.
பிஜேபி கட்சிக்குள்ளாகவே தன்னுடைய
செல்வாக்கை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, ஆயிரக்கணக்கான
முஸ்லீம்களை, கொலை செய்யத் தயங்காதவர், தன் புகழ் உயர வேண்டும் என்பதற்காக,
பலரை தீவிரவாதிகள் என்று பெயர் சூட்டி காவல்துறையை வைத்து போலி
என்கவுன்டரில் கொல்லத் தயங்காதவர், நியாயமாக செயல்படும் அதிகாரிகள் மீது
பொய் வழக்கு போட்டு சிறைக்கு தள்ளத் தயங்காதவர், தன்னோடு நெருக்கமாக இருந்த
பெண்ணை 24 மணி நேரமும் காவல்துறையை விட்டு பின்தொடரத் தயங்காதவர்....
இந்த நபரா நமக்கு பிரதமராக வேண்டும் ?????....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக