மும்பை: செப்டம்பர் மாதம் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பிச் சென்று பின்னர் கைதுச் செய்யப்பட்டார் என்ற செய்யப்பட்டதாக கூறப்படும் யாஸீன் உஸ்மானி தற்போது அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.நீதிமன்றத்திற்கு அளித்த கடிதத்தில் யாஸீன் உஸ்மானி கூறியிருப்பது: நான் தப்பிச் என்று பின்னர் பிடிபட்டது மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படை தயாரித்த நாடகமாகும்.ஏ.டி.எஸ் அதிகாரிகள் என்னை நீதிமன்ற வளாகத்தில் இருந்து கைதுச் செய்து அழைத்துச் சென்றனர்.செப்டம்பர் 20-ஆம் தேதி நீதிமன்ற வளாகத்திற்குள் எனது உறவினருடன் நான் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது இரண்டு ஏ.டி.எஸ் அதிகாரிகள் வந்து எங்களைக் கைதுச் செய்து அழைத்துச் சென்றனர். தாங்கள் யார்? என்பதை தெரிவித்த அவர்கள்,
பாதுகாப்புக்கு வந்த போலீசாரிடம், உஸ்மானி தப்பிவிட்டதாக நீதிமன்றத்தில் கூறுமாறு தெரிவித்தனர்.பின்னர் அண்மை மாவட்டமான தானேவில் உள்ள ஒரு பண்ணை வீட்டிற்கு கொண்டு சென்றனர்.எனது உறவினரை வேறு எங்கோ கொண்டு சென்றனர்.ஏ.டி.எஸ் அதிகாரிகள் பல தடவை பண்ணை வீட்டிற்கு வந்து என்னிடம் அப்ரூவராக மாறுமாறு வலியுறுத்தினர்.சிறப்பு அரசு தரப்பு வழக்குரைஞரான ராஜா தாக்கரேயும் என்னை சந்தித்து அப்ரூவராக மாற வலியுறுத்தினார். அப்ரூவராக மாறிவிட்டால் இவ்வழக்கில் இருந்தும், நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பிய வழக்கிலும் இருந்தும் விடுவிக்கலாம் என்று வாக்குறுதி அளித்தார். ஏதேனும் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்படுவோம் என்ற நம்பிக்கையில் அப்ரூவராக மாற நான் ஒப்புக்கொண்டேன்.நீதிமன்ற வளாகத்தில் வைத்து இத்தகவலை அறிந்த சிலர் மோக்கா நீதிமன்றத்திற்கு இது குறித்து கடிதம் எழுதுமாறு தெரிவித்தனர். இவ்வாறு உஸ்மானி கூறியுள்ளார்.2008-ஆம் ஆண்டு டெல்லி, ஹைதராபாத் குண்டுவெடிப்புகளுக்கான பொறுப்பை ஏற்று இந்தியன் முஜாஹிதீன் அனுப்பியதாக கூறப்படும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வேளையில் டிசம்பர் 10-ஆம் தேதி உஸ்மானி மஹராஷ்ட்ரா மோக்கா நீதிமன்றத்திற்கு இக்கடிதம் எழுதியுள்ளார்.மும்பை அமர்வு நீதிமன்றத்தின் வளாகத்தில் இருந்து செப்டம்பர் 20-ஆம் தேதி உஸ்மானி தப்பிச்சென்றதாகவும் அக்டோபர் 28-ஆம் தேதி இந்தியா-நேபாளம் எல்லையில் அவரை ஏ.டி.எஸ் கைதுச் செய்ததாகவும் போலீஸ் கூறுகிறது.
இந்தியா-நேபாளம் எல்லையில் வைத்து யாஸீன் உஸ்மானி ஏ.டி.எஸ்ஸால் கைதுச் செய்யப்படும் நாளில் தான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால், இ-மெயில் அனுப்பிய வழக்கின் விசாரணையில் ஏ.டி.எஸ்ஸிற்கு தொடர்பு இல்லை என்றும் இவ்வழக்கை மும்பை க்ரைம் ப்ராஞ்ச் விசாரிப்பதாகவும் சிறப்பு அரசு வழக்குரைஞர் ராஜா தாக்கரே செய்தி ஏஜன்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக