திங்கள், டிசம்பர் 09, 2013

ஆம் ஆத்மி அலையில் காங்கிரஸ் படு தோல்வி - மக்கள் விரோத ஆட்சிக்கு கிடைத்த பரிசு

டெல்லி, இராஜஸ்தான். ம.பி., மற்றும் சட்டீஸ்கர் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. முதன்முதலாக தேர்தலில் களம் கண்ட ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் சிறந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர்.மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆளும் பா.ஜ.க ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. ம.பியில் உள்ள மொத்தத் தொகுதிகள் 230, இதில் பாஜக 165 இடங்களியும், காங்கிரஸ் 58 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.சட்டீஸ்கரில்...
உள்ள மொத்த சட்டமன்ற தொகுதிகள் 90, இதில் பாஜக 49 தொகுதிகளையும், காங்கிரஸ் 39 இடங்களிலும் வென்றுள்ளது.இராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் பாஜகவிடம் ஆட்சியை இழந்துள்ளது. அங்கு உள்ள மொத்த தொகுதிகள் 199. இதில் 162 தொகுதிகளில் 162 இடங்களிலும், 21 இடங்களில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றுள்ளது.டெல்லியில் ஆம் ஆத்மி அலையில் காங்கிரஸ் அடித்துச் செல்லப்பட்டுள்ளது அங்கு தொங்கு சட்டசபை ஏற்ப்பட்டுள்ளது. மொத்த 70 தொகுதிகளில் பாஜக 32, ஆம் ஆத்மி 28 இடங்களிலும் காங்கிரஸ் 8 இடங்களிலும் பகுஜன் சமாஜ் 1, சுயேட்சை 1 இடத்திலும் வெற்றிபெற்றுள்ளன. அங்கு ஆட்சியமைக்க 36 இடங்கள் தேவை என்பதால் தொங்கு சட்டசபை ஏற்ப்பட்டுள்ளது.இதனிடையே, ஆம் ஆத்மி கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமரும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளதால். இதனால், டெல்லியில் குழப்பம் நீடிக்கிறது. கடந்த மூன்று முறை முதல்வராக இருந்த காங்கிரஸின் ஷீலா தீட்சித்தை, புது டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.காங்கிரஸ் கட்சியின் இந்த படுதோல்விக்கு மக்கள் விரோத கொள்கையும், ஊழலுமே அடிப்படை காரணமாக இருந்தது. டெல்லியில் காங்கிரஸ், பாஜவுக்கு மாற்றாக ஆம் ஆத்மியை தேர்ந்தெடுத்த மக்கள் மற்ற மாநிலங்களில் காங்கிரஸூக்கு மாற்றாக வேறு கட்சிகள் இல்லாத பட்சத்தில் பாஜகவை தேர்ந்தெடுக்க நேர்ந்துள்ளது. இது பாஜகவுக்கு கிடைத்த அங்கீகரமாக இல்லாமல் மக்கள் விரோத கொள்கையால் ஏற்ப்பட்ட காங்கிரஸூக்கு கிடைத்த தோல்வி என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக