வியாழன், டிசம்பர் 19, 2013

கல்வித்துறையில் இஸ்ரேலை புறக்கணிக்க அமெரிக்க அறிஞர்கள் முடிவு!

நியூயார்க்: இஸ்ரேலை கல்வித்துறையில் (அகடாமிக்) புறக்கணிக்கும் தீர்மானத்தை அமெரிக்க அறிஞர்களின் அவை அங்கீகரித்துள்ளது. 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட அமெரிக்கன் ஸ்டடீஸ் அசோசியேஷன் (எ.எஸ்.எ.) இஸ்ரேலின் ஃபலஸ்தீனுடனான கொள்கையை கண்டித்து இஸ்ரேலை புறக்கணித்துள்ளது.
உறுப்பினர்களில் 66 சதவீதம் பேர் இஸ்ரேலுக்கு எதிரான புறக்கணிப்பை ஆதரித்தனர். 2 சதவீதம் பேர் வாக்கெடுப்பில் கலந்துள்ளவில்லை. 30.5 சதவீதம் பேர் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கடைப்பிடித்தனர்.உறுப்பினர்களிடையே ஒரு மாதத்திற்கும் மேலாக நீண்ட வாக்கெடுப்பில் எ.எஸ்.எ. இத்தீர்மானத்தை எடுத்துள்ளது. சுதந்திரம் புறக்கணிக்கப்பட்ட ஃபலஸ்தீன் மக்கள் உள்ளிட்டோருக்கு ஆதரவைப் பிரகடனப்படுத்தி எ.எஸ்.எ. இஸ்ரேலைப் புறக்கணிப்பதாக பத்திரிகைச் செய்தியில் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக