புதன், டிசம்பர் 11, 2013

டெல்லி : 25 புதிய எம் எல் ஏ மீது கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 70 உறுப்பினர்களில் 25 பேர் மீது கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளன. அதில் 17 பேர் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் ஆவர். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப் பெற்ற 22 பேர் மீண்டும் எம்.எல்.ஏக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 15 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. பா.ஜ.கவின் முதல்வர் வேட்பாளார் ஹர்ஷவர்தன் உள்ளிட்ட 50 சதவீதத்திற்கும் அதிகமான எம்.எல்.ஏக்களின் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. பா.ஜ.கவின் 31 எம்.எல்.ஏக்களில் 12 பேர் மீது கிரிமினல் குற்றமும், கொலைக் குற்றமும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் உள்ளிட்ட கடுமையான குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

அரசு சாரா நிறுவனமான அசோசியேஷன் ஆஃப் டெமோக்ரேடிக் ரிஃபார்ம்ஸ் (எ.டி.ஆர்) வெளியிட்ட புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
எ.டி.ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஆம் ஆத்மி கட்சியின் 3 எம்.எல்.ஏக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன.
மோகன்சிங் பிஷ்த், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்ளன. சிரோமணி அகாலிதள எம்.எல்.ஏ மஜிந்தர்சிங் சிரோஸ் மீது 235,51 கோடி வருமானத்திற்கு அதிமான சொத்துக்களை சேர்த்தார் என்ற வழக்கு  உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக