மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள், பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளில் பெரும்பாலானவைகளால் எந்தப் பிரயோஜனமும் இல்லாததோடுஅவை மக்களுக்கு அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துவதாக அதிர்ச்சி ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.டாக்டர் வினய் பிரசாத் அவர்கள் தலைமையில் நியு இங்லண்ட் ஜர்னல் ஆப் மெடிசின் என்ற புகழ் பெற்ற பத்திரக்கையில் பிரசுரமான 1,344 கட்டுரைகளை அலசி ஆராய்ச்சி செய்யப்பட்டது. அந்த ஆராய்ச்சியின் முடிவில், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகள், அவர்கள் அளிக்கும் சிகிச்சை முறைகள் பாதிக்கு மேல் பயனற்றவை; பல சிகிச்சைகள் உண்மையில் நோயின் பாதிப்பை அதிகப்படுத்துகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.
மாதவிலக்கு நின்று விட்ட பெண்களுக்கு ஹார்மோன் தெரபி என்ற சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சிகிச்சையால் ஜீன் இயக்கம் மேம்படும் என்று நம்பப்பட்டது. ஆனால், உண்மையில் இந்த தெரபியால் பலனில்லை என்பது மட்டுமல்ல, இதயத்தையும் அது பாதிப்பது தெரியவந்துள்ளது.
இதய ரத்த நாளங்களில் ஸ்டெண்ட பொருத்துவது வீணான சிகிச்சை முறை என்று நிருபணமாகி விட்டது. டையாபடிஸ் நோயாளிகளுக்கு உடலில் குளுகோஸ் அளவை குறைக்க மேற்கொள்ளும் சிகிச்சை எதிர்பார்ப்புக்கு மாறாக மரணம் வரையில் கொண்டு செல்வதும் கவனத்துக்கு வந்திருக்கிறது. புற்று நோயாளிகளுக்கு செய்யப்படும் ஓவர்டோஸ் கீமோதெரபி, உயிரணு மாற்றம் போன்ற சிகிச்சை முறைகளும் ஆபத்தானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. 2001 முதல் 2010 வரை நடைமுறைக்கு வந்த 363 சிகிச்சை முறைகளை விரிவாக ஆராய்ந்த போது அவற்றில் 40 சதவீதம் பயனற்றவை; 22 சதவீதம் பயன் நிரூபிக்கப்படாதவை; 38 சதம் மட்டுமே பயன் அளிப்பவை என்று தெரியவந்துள்ளது.
சமீபத்தில் கவனக்குறைவாக சிகிச்சை அளித்ததால் மரணம் அடைந்த பெண்ணின் கணவனுக்கு 11 கோடி இழப்பீடு கொடுக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீரப்பு இதற்கு ஒரு உதாரணமாக அமைந்து விட்டது என்பதில் ஐயமில்லை. ஆகவே, மக்களே உசார்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக