சிரியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் மரணத்திற்கு காரணமான இரசாயன ஆயுதம் பிரயோகிக்கப்பட்டதை உலக மக்களை திசை திருப்ப அமெரிக்க அதிபர் ஒபாமா பயன்படுத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.சிரியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கான சூழலை உருவாக்க ஒபாமா இந்நடவடிக்கையை மேற்கொண்டார் என்று பிரபல அமெரிக்க பத்திரிகையாளரும் புலிஸ்டர் விருது பெற்றவருமான ஸைமூர் ஹெர்ஷ் தனது நூலில் எழுதியுள்ளார்.
சிரியாவில் ஆஸாத் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தி வரும் அல்காயிதாவுடன் தொடர்புடைய அல் நுஸ்ரா ஃப்ரண்டின் கைவசம் ஷரின் என்ற இரசாயன ஆயுதம் இருப்பதாக பாதுகாப்பு ரகசிய உளவு ஏஜன்சி துணை தலைவருக்கு அனுப்பிய ரகசியச் செய்தியில் கூறுகிறது என்று ’ஹூஸ் ஷரின்’ என்ற தனது நூலில் ஹெர்ஷ் கூறுகிறார்.அல் நுஸ்ரா ஃப்ரண்ட் போன்ற ஆயுத குழுக்களிடம் ஷரின் இரசாயன ஆயுதம் இருக்கும்போது இரசாயன ஆயுத பிரயோகத்தின் பின்னணியில் ஆஸாத் அரசு மட்டுமே இருப்பதாக கூறும் ஒபாமா, ரகசிய உளவுத்துறை அளித்த அனைத்து விபரங்களையும் மூடி மறைத்துள்ளார்.இரசாயன ஆயுத தாக்குதல் நடந்த பிறகு ஐக்கிய நாடுகள் அவையின் அமெரிக்க தூதர் சாமந்தா பவர் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில், ஆஸாத்திடம் மட்டுமே இரசாயன ஆயுதம் இருப்பதாகவும், எதிர்ப்பாளர்களிடம் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பு, அபுகுரைப் சிறைச்சாலையில் கைதிகள் மீதான சித்திரவதைக் குறித்து ஹெர்ஷின் ஆய்வு பிரசித்திப் பெற்றது.சிரியாவுக்கு இரசாயன ஆயுதம் பிரிட்டனிலிருந்து கிடைத்ததாக சில ஊடகங்கள் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக