செவ்வாய், டிசம்பர் 10, 2013

பா.ஜ.க.வின் வெற்றிக்கு காரணம் காங்கிரஸ் – எஸ்.டி.பி.ஐ.

புதுடெல்லி: நான்கு வடஇந்திய மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு கிடைத்துள்ள வெற்றிக்கு காங்கிரஸ் கட்சியின் ஊனமான கொள்கைகளும், அரசு துறைகளின் ஊழல்களுமே காரணம் என்று சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர்            எ.ஸயீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பது: நரேந்திர மோடியின் தலைமையே பா.ஜ.க.வின் வெற்றிக்கு காரணம் என்ற வாதம் தவறானது. முற்றிலும் மதச்சார்பற்ற இமேஜ் இல்லாத நபர்தாம் மோடி.பா.ஜ.க.வுக்கு வாக்களித்த பெரும்பாலான மக்கள், மோடி மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் வகுப்புவாத சிந்தனைகளை அங்கீகரிப்பதில்லை. காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாக்குகள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக மாறியுள்ளன. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கும், ராஜஸ்தான் மாநிலம் கோட்டா (வடக்கு) தொகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளருக்கும் கிடைத்த வாக்குகள், மக்கள் வலுவான ஒரு மாற்று அரசியல் சக்தியை தேடுகின்றார்கள் என்பதற்கான ஆதாரமாகும்.இத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த வெற்றி என்பது ஒரு சில வடமாநிலங்களுடன் ஒதுங்கக் கூடியது. மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை பெற முடியாது. இவ்வாறு எ. ஸயீத் கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக