புதன், டிசம்பர் 04, 2013

டெல்லி தேர்தல்: வாக்களித்த சோனியா, ராகுல்

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோர் வாக்களித்தனர். சோனியா காந்தியும், ராகுல் காந்தியும்...
   ...அவுரங்கசீப் லேன் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தனர். சோனியா காந்தி 32 நிமிடங்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார், ராகுல் காந்தியும் அரை மணி நேரம் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். ராகுல் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது ஆனால் உடனடியாக அது சரிசெய்யப்பட்டது.  

ஷீலா தீட்சித் தயக்கம்:  தொடர்ந்து 3 முறை டெல்லி மாநில முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் இந்த முறையும் காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இன்று காலை வாக்களித்தப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஷீலா தீட்சித், தேர்தல் முடிவை தாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகத் தெரிவித்தார். வெற்றிச் சின்னம் காட்டுமாறு புகைப்படக்காரர்கள் கேட்ட போது தயக்கம் காட்டினார் ஷீலா தீட்சித். டெல்லி தேர்தலில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக