வியாழன், டிசம்பர் 19, 2013

ஓரினசேர்க்கை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம்! ஆதரவாளர்களை வன்மையாக கண்டிக்கிறோம்! நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநில தலைவர் அறிக்கை!

ஓரினசேர்க்கை என்ற மிகக்கொடிய ஒழுக்கக்கேடான செயலுக்கு டெல்லி சுப்ரீம் கோர்ட் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 ன் கீழ் ஓரின சேர்க்கை கொள்வது கிரிமினல் குற்றம் என்றும் இந்த குற்றத்திற்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்கலாம் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) வரவேற்கிறது.இந்த கிரிமினல் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை வழங்குவது மட்டுமல்லாமல் அதிகபட்ச தண்டனையான மரணதண்டனை வழங்குவதற்கு தகுதியான ஒரு மோசமான அருவருக்கத்தக்க செயல்தான் இந்த ஓரின சேர்க்கை.
ஆனால் சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள இந்த தீர்ப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கூறிய கருத்துக்களையும், ஓரினசேர்க்கை ஆதரவாளர்களின் எதிர்ப்பையும் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது.ஓரினசேர்க்கை இந்திய இறையாண்மைக்கும், கலாச்சாரத்திற்கும் மற்றும் இறைவனின் நியதிக்கும் எதிரானது. இந்த ஒழுக்கக்கேடான செயல்களின் மூலம் நாட்டில் எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் அதிகரிப்பதுடன், எதிர்கால சந்ததியினர்கள் ஒழுக்கக்கேட்டின் பக்கம் செல்லும் அபாயமும் இருக்கிறது. இந்த ஒழுக்ககேட்டின் காரணமாக இந்தியா பல்வேறு கலாச்சார சீரழிவுகளை சந்திக்க நேரிடும்.எனவே ஒழுக்கக்கேடுகளும், கலாச்சார சீரழிவுகளும் நிகழும் வகையான ஓரினசேர்க்கை ஆதரவாளர்களுக்கு சாதகமாக பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவரவோ, அது சம்மந்தமான வழக்குகளில் ஆதரவு தெரிவிக்கும் ரீதியில் மேல்முறையீடு செய்யவோ மத்திய அரசு முயல கூடாது என்பதை நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
A . பாத்திமா ஆலிமா,
மாநில தலைவர்,
நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக