திங்கள், டிசம்பர் 31, 2012

லோக்சபா தேர்தலில் காங், பாஜக கூட்டணி இல்லாமல் தனித்தே போட்டியிட தயாராவோம்: ஜெயலலிதா !

சென்னை: 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியின்றி தமிழகம், புதுவையின் 40 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட அதிமுக தொண்டர்கள் தயாராக வேண்டும் என்று அக்கட்சி பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார். சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு- பொதுக்குழுவில் பேசிய ஜெயலலிதா, லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட தொண்டர்கள் தயாராக வேண்டும். காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியின்றி போட்டியிட தயாராவோம். இந்தத் தேர்தலில் ஈடு இணையற்ற

டெல்லி மாணவி உடல் ரகசியமாக தகனம் !

இந்திய தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்த 23 வயது மாணவியின் உடல் ஞாயிற்றுக்கிழமை காலையில் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.பாதுகாப்பு கருதி அவரது இறுதிச் சடங்கு நடைபெற்ற இடத்தை டெல்லி அரசும் போலீஸாரும் மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர்.இறுதிச் சடங்கில் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தில்லியில் கடந்த 16-ம் தேதி இரவு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான

குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரம் !

புதுடெல்லி:இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்புகளையும், கொலைகளையும் நிகழ்த்திய ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கங்களுக்கு ஆலோசனைகளை வழங்கிய அறிவுஜீவிகளை தேடும் பணியை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) தீவிரப்படுத்தியுள்ளது. குண்டுவைப்பதில் நிபுணர்களான ராஜேந்தர் சவுத்ரி, மனோகர்சிங் ஆகியோரை கைது செய்த என்.ஐ.ஏ, தலைமறைவாக உள்ள ராம்ஜி கல்சங்கரா, சந்தீப் டாங்கே ஆகியோரை விரைவாக பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இவர்களை கைது செய்தால் நாசவேலைகளின் பின்னணியில் மூளையாக செயல்பட்ட ஹிந்துத்துவா அறிவிஜீவிகளையும், சித்தாந்தவாதிகளையும் கைது செய்ய முடியும் என கருதுவதாக என்.ஐ.ஏ

இமயமலையில் கடும் நிலநடுக்கம் ஏற்படும்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை !

இந்தியாவில் வடக்கு எல்லையான இமயமலை பகுதியில், கடும் நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இது, ரிக்டர் அளவில், 8.0 முதல் 8.5 வரை பதிவாகும் என்றும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கூறிய சிங்கப்பூரை சேர்ந்த, நன்யாங் தொழில் நுட்ப பல்கலை கழக விஞ்ஞானிகள் சிலர் பவுல் டாப்பொன்னியர் என்பவர் தலைமையில், இமயமலை பகுதியில் ஆய்வு நடத்தினர். இவர்களுடன், நேபாளம் மற்றும் பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் பங்கேற்றனர். ஏற்கனவே இமயமலை பகுதியில், 1897 மற்றும் 1905, 1934, 1950ம் ஆண்டுகளில், பூகம்பம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ரிக்டர் அளவில், 7.8 முதல், 8.9 வரை பதிவாகியுள்ளது. இருப்பினும், 1934ல் ஏற்பட்ட பூகம்பத்தில், 150 கிலோ மீட்டர் நீளத்திற்கு நிலத்தில் வெடிப்புகள் ஏற்பட்டன.ஆறுகளின்

கற்பழிப்பு குற்றவாளிகளின் ஆணுறுப்பை ரசாயனம் செலுத்தி செயலிழக்க வைக்க வேண்டும் : ரேணுகா சவுத்ரி !

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி டெல்லி மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து இக்குற்றங்களை தடுக்க க்டுமையான சட்ட திருத்தங்களை கொண்டு வர மத்திய அரசு மற்றும் காங்கிரஸ் கட்சி தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. டெல்லி மாணவி வன்கொடுமைக்கு ஆளானதை தொடர்ந்து நாடு முழுவதும் ஏற்பட்ட கொந்தளிப்பான சூழ்நிலையை தொடர்ந்து,பாலியல் வன்கொடுமைக்கு எதிராக எவ்வகையான

இரு கைகளையும் இழந்த அலி அப்பாஸுக்கு வாழ்க்கை துணைவி கிடைத்தார் !


பாக்தாத்:ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்தின் குண்டுவீச்சில்  இரு கைகளையும் இழந்து உடல் முழுவதும் காயமடைந்தபொழுது தனக்கும் இனியொரு வாழ்வு கிடைக்கும் என அப்பாஸ் சிந்தித்துக் கூட இருக்கமாட்டார். 21 வயதை தாண்டிவிட்ட அலி அப்பாஸுக்கு மனைவியாக அன்கம் வந்தது இறைவனின் நிச்சயமாகும். அமெரிக்க ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் உடலின் 60 சதவீதமும் காயமடைந்த அலியின் குடும்பத்தில் 16 பேரும் கொல்லப்பட்டனர். இரு கைகளையும் இழந்து மருத்துவமனையில் வேதனையால் துவளும் அலியின் புகைப்படம் அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பின் சின்னமாக அன்று

பெற்றோரை கண்டுகொள்ளாத பிள்ளைகளுக்கு ஜெயில்: சீனாவில் புதிய சட்டம் !!

பெற்றோரைப் பராமரிக்கத் தவறும் பிள்ளைகளுக்குச் சிறை தண்டனை வழங்கும்விதத்தில் சிறப்புச் சட்டமொன்றை சீன அரசு அதிரடியாக கொண்டுவந்துள்ளது. சீனாவில் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை சட்டம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. இதனால் அங்கு வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 60 வயதுக்கு மேல் 16 கோடியே 70 லட்சம் பேரும், 80

மலேகான் குண்டுவெடிப்பு:குண்டுவைத்த ஹிந்துத்துவா தீவிரவாதி கைது !

புதுடெல்லி:2006-ஆம் ஆண்டு மலேகானில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் குண்டுவைத்த ஹிந்துத்துவா தீவிரவாதியை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கைது செய்துள்ளது. இக்குண்டுவெடிப்பின் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் செயல்பட்டது குறித்து சுவாமி அஸிமானந்தா அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து முதல் கைது சம்பவம் நடந்துள்ளது.

இந்திய பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகி விட்டது !

இந்தியாவின் தலைநகரில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் மரணமடைந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு இயக்கம் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய தலைவர் K.M.ஷெரீஃப் : இளம்பெண்ணின் மரணம் இந்திய பெண்களின் பாதுகாப்பைக் குறித்து ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஒருவேளை உணவுக்காக ஏங்கி நிற்போர் பிரான்சில் அதிகரிப்பு !

பசிக்கு உணவளிக்கும் பிரெஞ்சு பொதுநல அமைப்பு ஒன்று பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசும் பொதுமக்களும் தங்களுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. பிரான்சில் அதிகரித்துவரும் வறுமை காரணமாக உணவு கேட்டுவருவோர் எண்ணிக்கை 12 சதவீதம் உயர்ந்திருப்பதாக Restaurants with Heart என்ற பொதுநல அமைப்பின் தலைவரான ஒலிவியர் பெர்த்தா தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டு

ஹோமுஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடற்பயிற்சி !

வளைகுடா பிராந்தியத்தில் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த ஹோமுஸ் நீரிணைப் பகுதியில் ஈரான், தொடர்ந்து கடற்படை போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் பயிற்சி ஹோமுஸ் நீரிணையைச் சுற்றிய 10 லட்சம் சதுர கிலோ மீற்றர் பரப்பில் நடப்பதாக கடற்படை தளபதி ஹபிபோலோ சையரி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, இந்தப் பயிற்சியின்போது கப்பலிலிருந்து ஏவுகணைகளை வீசுவது,

ஞாயிறு, டிசம்பர் 30, 2012

இஸ்லாமியர்களைப் போல அனைத்துப் பெண்களும் பர்தா அணிய வேண்டும் - மதுரை ஆதீனம் !

மதுரை: இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், இஸ்லாயமிப் பெண்கள் பர்தா அணிவது வழக்கம். கணவரைத் தவிர வேறு யாரும் தங்களது உடலைக் கண்டு விடக் கூடாது என்பதற்காக இந்தக்கட்டுப்பாட்டை அவர்கள் கையாளுகின்றனர். இதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், இந்தியப் பெண்களும் கூட பர்தா அணிய வேண்டியது

பாலியல் பலாத்காரத்துக்குப் பலியான மாணவியின் உடல் தகனம் !

டெல்லி: பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகி உயிரிழந்த மாணவியின் உடல் டெல்லி வந்தடைந்த சிலமணி நேரத்தில் தகனம் செய்யப்பட்டது. டெல்லியில் ஓடும் பேருந்தில் கடந்த 16-ந் தேதி மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கியது. பின்னர் ஓடும் பேருந்தில் இருந்து மாணவியை தூக்கி வெளியே வீசியது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்துக்கு நீதி கோரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தால்

சனி, டிசம்பர் 29, 2012

இஸ்லாமிய கலாசாரத்தை பாதுகாக்க ஆல் இந்தியா இமாம் கவுன்சில் நடத்தும் கலாச்சார பாதுகாப்பு மாநாடு !!

கலாச்சார பாரம்பரியமிக்க நம் நாட்டின் இன்றைய நிலை மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. தனி மனித ஒழுக்கங்கள், குடும்ப உறவு முறைகள், சமூக வாழ்வு என அனைத்தும் சிதைந்து வருகிறது. சுயநலம், பாலியல் வன்கொடுமைகள், தகாத உறவுகள், கொலை, கொள்ளை, மது, விபச்சாரம், பெண்களை போகப்பொருளாக பயன்படுத்துதல், கற்பழிப்பு போன்ற சமூக தீமைகள் தினமும் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது.

பாஜக அலுவலகத்தில் ஒரு பலாத்காரம் !!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தலைநர் போபால் அருகே பாஜக அலுவலகத்தில் வைத்து ஒரு இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அந்த மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் மாணவி ஒருவரை ஓடும் பஸ்சில் வைத்து ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய

டில்லியில் கற்பழிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலன் இன்றி சிங்கப்பூரில் திடீர் மரணம் !

டில்லியில் கற்பழிக்கப்பட்ட 23 வயது மருத்துவ மாணவி சிகி்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கடந்த இரு நாட்களாக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், உடல் உறுப்புகள் செயல் இழந்த நிலையில் சிகிச்ச‌ை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கடந்த 16-ம் தேதியன்று டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் கற்பழிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டார். பலத்த காயங்களுடன் அவர் டில்லி சப்தர்ஜங் மருத்துவுமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக , மாணவர்கள், மகளிர் அமைப்பினர் டில்லியில் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகி்ன்றனர். இந்த விவகாரம் பார்லிமென்டிலும் எதிரொலித்தது. பெண் எம்.பி.க்கள் கொந்தளித்தனர். நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம் எனவும், குற்றவாளிகளை

பதினாறு குண்டுவெடிப்புகளுக்கு ஹிந்துத்துவா பயங்கரவாதிகளே காரணம். . .

இந்தியாவில் இதுவரை சம்பவித்த குண்டுவெடிப்புகளில் 16 குண்டுவெடிப்புகளை ஹிந்துத்துவ தீவிரவாதிகள் நிகழ்த்தியதாக வாக்குமூலங்கள் வெளிவந்துள்ளன. இதன் மூலம் இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவ தீவிரவாதிகளுக்கு பங்கிருப்பது தெரியவந்துள்ளது.  மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, 2-வது மலேகான் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளில் தொடர்புடையதாக, அண்மையில் தேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதி ஒருவர் இதனை தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் 2007 ஆம் ஆண்டு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் தொடர்வண்டியில் குண்டுவைத்த ராஜேந்தர் சவுத்ரி அண்மையில் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜையினில் இருந்து கைது செய்யப்பட்டார். இதையடுத்தே இந்த உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன
ஹிந்துத்துவா தீவிரவாத குழுக்கள் குண்டுவெடிப்புகளை நடத்தி விட்டு முஸ்லிம்கள் மீது பழியை சுமத்திவிட்ட உண்மை

ஆசியாவின் மிக நீண்ட நதியின் குறுக்கே சுரங்க ரயில் பாதை:சீனா சாதனை !

ஆசியாவின் மிக நீண்ட நதியான யாங்ட்ஸியின் குறுக்கே 27 கி.மீ. தூர சுரங்க ரயில் பாதையை சீனா அமைத்துள்ளது. இப்பாதையில் ரயில் பயணம் சனிக்கிழமை தொடங்கியது. குபெய் மாகாணத்தின் ஊகான் நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை, ஊசாங் மற்றும் ஹன்கூ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இப்பாதையை 3 நிமிடங்களில் ரயில்கள் கடந்து விடும். நாள்தோறும் 26 ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுளளது. சுரங்க ரயில் பாதை திறக்கப்பட்டுள்ளதைத்

மொபைலில் ஏற்பட்ட நட்பு பாலியல் பலாத்காரத்தில் முடிந்தது: கர்நாடகா பெண்ணிற்கு கேரளாவில் ஏற்பட்ட கொடுமை !

கும்பளா(கேரளா):மொபைல் ஃபோனில் அறிமுகமான இளைஞரை சந்திக்க கேரளா மாநிலம் உப்பளாவிற்கு வந்த கர்நாடகா மாநிலத்தைச் சார்ந்த இளம் பெண்ணொருவரை காம வெறிப்பிடித்த கயவர்கள் பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். போனில் அறிமுகமான இளைஞனும், அவனது இரண்டு நண்பர்களும் சேர்ந்து ஆம்னி வேனில் இளம் பெண்ணை உப்பளாவில் இருந்து மங்களூர் வரை அழைத்து சென்று பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். கும்பளாவில் நடக்க கூட முடியாமல் சோர்ந்து போய் இறக்கிவிடப்பட்ட பெண், அங்கு வந்த ஆட்டோவில் ஏறி அனாதை

வெள்ளி, டிசம்பர் 28, 2012

எங்க அம்மா அப்போவே சொல்லுச்சு இந்த தொழில் செய்யாதன்னு நான் தான் கேக்கல : துறை தயாநிதி புலம்பல் !

மதுரை: எனது தந்தையான மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, எனது தாயார் காந்தி அழகிரி உள்பட எனது குடும்பத்தைச் சேர்ந்த யாருக்கும் கிரானைட் விவகாரத்தில் தொடர்பில்லை. உண்மையில் இந்தத் தொழிலில் சேர வேண்டாம் என்றுதான் எனது தந்தை சொன்னார் என்று கூறியுள்ளார் அழகிரியின் மகன் துரை தயாநிதி. கிராடனைட் மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்து வந்த துரை தயாநிதி, தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவரிடம் மேலூர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். நேற்று முழுவதும் நடந்த இந்த விசாரணையின்போது துரை தயாநிதியிடம், அவர் இயக்குநராக இருந்த ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் தொடர்பாக பல கேள்விகளைக் கேட்டு போலீஸார் வாக்குமூலம் பெற்றனர். அப்போது துரைதயாநிதி கூறுகையில், ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்தில் சிறிது காலம் சைலண்ட் பார்ட்னராக இருந்தேன். அதன் பின்னர் அதிலிருந்தும் விலகிவிட்டேன். ஆனால்

ஜெயலலிதா நடத்தியது நாடகம்; அவரை மத்திய அரசு அவமதிக்கவில்லை- மு.க.ஸ்டாலின் !

முதல்வர்கள் கூட்டத்தில் ஜெயலலிதாவை மத்திய அரசு அவமதிக்கவில்லை. ஆனால் ஜெயலலிதா வெளிநடப்பு என்று நாடகம் நடத்தி உள்ளார் என்று திமுக பொருளாளார் மு.க.ஸ்டாலின் கூறினார். நெல்லை நாடாளுமன்றத் தொகுதி திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் பாளை ரெட்டியார்பட்டியில் நடந்தது. நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமிபாண்டியன் தலைமையில் நடந்த இந்தக்

ஆண்களை கற்பழிப்பு போன்ற குற்றங்களைச் செய்ய பெண்கள் தான் தூண்டுகிறார்கள் : டாக்டர் அனிதா சுக்லா !

கார்கோன்: மருத்துவ படிப்பு மாணவி தன்னை 6 பேர் சூழ்ந்தவுடன் அவர்களிடம் சரணடைந்திருந்தால் இந்நேரம் அவரது குடல் தப்பித்திருக்கும் என்று விஞ்ஞானி டாக்டர் அனிதா சுக்லா தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படு்ததியுள்ளது. மேலும் இரவு நேரத்தில் ஆண் நண்பருடன் சுற்றினால் இது போன்ற சம்பவங்கள் 
நடக்கத் தான் செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

மூளை செத்துப் போன கூகுள் தலைமுறை.. கண்டுபிடிப்பாளர் பெய்லிஸ் வருத்தம் !

லண்டன்: இன்றைய குழந்தைகளை இன்டர்நெட், குறிப்பாக கூகுள் மூளை வறட்சியுடையவர்களாக மாற்றி விட்டது. இது பெரும் வருத்தமாகவும் வேதனையாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளார் பிரபல இங்கிலாந்து கண்டுபிடிப்பாளர் டிரெவர் பெய்லிஸ். 75வயதான பெய்லிஸ் பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். அதில் முக்கியமானது வைன்ட்அப் ரேடியோ. அவர் இன்றைய

இஸ்ரேல் இவ்வாண்டு கைது செய்த ஃபலஸ்தீன் குழந்தைகளின் எண்ணிக்கை – 900 !

டெல் அவீவ்:இஸ்ரேல் ராணுவம் இவ்வாண்டு 900 ஃபலஸ்தீன் சிறார்களை கைது செய்துள்ளதாக ஃபலஸ்தீன் சிறைக்கைதிகளின் விவகாரங்களுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட சிறார்கள் 700 பேர் ஆவர். ஃபலஸ்தீன் சிறார்களை இஸ்ரேல் ராணுவம் கொடூரமாக சித்திரவதைச் செய்வதாக அறிக்கை கூறுகிறது. கையும், காலும் கட்டி பல மணிநேரம் சிறையில் விசாரிக்கப்படுவது வழக்கமாகும். குற்றங்களை ஒப்புக்கொள்வதற்காக இஸ்ரேல் ராணுவம்

தமிழகத்தில் “ஸ்மார்ட்” ரேஷன் கார்டு அறிமுகம் !

சென்னை: தமிழகத்தில் தற்போது, புழக்கத்தில் உள்ள, குடும்ப அட்டைகளை அடுத்த 2014ம் ஆண்டு வரை நீட்டித்து, அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் வரும் 2015ம் ஆண்டில் "ஸ்மார்ட்” குடும்ப அட்டையை பொது மக்களின் புழக்கத்துக்கு கொண்டு வர உள்ளது. தமிழகத்தில், தற்போது, புழக்கத்தில் இருந்து வரும் குடும்ப அட்டைகளை 2011 மற்றும் 12ம் ஆண்டுகளுக்கான, கூடுதலாக, உள்தாள் இணைக்கப்பட்டு, கார்டுதாரர்களுக்கு, பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த உள்தாள்களும், இந்த டிசம்பர் மாதத்துடன் முடிவதால் ஜனவரி, 1 முதல் குடும்ப அட்டைகளில்  புதிதாக உள்தாள்கள் இணைக்கப்பட வேண்டும். "தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப

ஃபலஸ்தீன்: சிறைக்கைதிகளுக்கு ஆதரவாக குழந்தைகள் நடத்திய பேரணி !

காஸ்ஸா சிட்டி: இஸ்ரேல் அதிகாரிகளால் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஃபலஸ்தீனர்களின் குழந்தைகள் காஸ்ஸாவில் மெழுகு வர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர். தங்களின் உற்றார்களை காலவரையற்று சிறையில் அடைத்துள்ள நடவடிக்கையை இஸ்ரேல் நிறுத்தி, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று குழந்தைகள் இஸ்ரேல் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சட்டவிரோத சிறைக்கு எதிராக இஸ்ரேல் சிறையில் பல மாதங்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் ஸமர் இஸாவி மற்றும் அய்மன் ஷர்வான் ஆகியோரின் படங்களை ஏந்தியவாறு காஸ்ஸாவில் உள்ள ரெட்க்ராஸ் தலைமையகம் நோக்கி குழந்தைகள் பேரணி நடத்தினர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபலஸ்தீனர்கள் இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

ஜம்மு-கஷ்மீர் குண்டுவெடிப்புகளின் பின்னணியிலும் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் !

புதுடெல்லி:ஜம்மு-கஷ்மீரில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளிலும் ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு பங்கிருப்பது தெரியவந்துள்ளது. முதல் மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, 2-வது மலேகான் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய, அண்மையில் என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகள் இதனை தெரிவித்துள்ளனர். ஹிந்துத்துவா

என் மகளை போனில் டேட்டிங்கிற்கு அழைக்கும் இளைஞர்கள் அதிகமாகி விட்டார்கள் ! – ஒபாமா !

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் டீன் ஏஜ் மகள் மாலியாக்கென புதிதாக செல்போனை கொடுத்து விட்டதாகவும் அந்த போனில் தன் மகளுக்கு எக்கச் சக்க இளைஞ்ர்களிடமிருந்து டேட்டிங் கேட்டு போன் மேல் போன் வந்தவண்ணம் இருப்பதாகவும் தந்தை ஒபாமாவும் தாயார் மிஷலும் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஒபாமாவும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவும் வெள்ளை மாளிகையில் நேற்று ஏபிசி நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தனர்.இந்த பேட்டியின்போது தங்களது 20 ஆண்டு

நண்பரிடம் போட்டி போட்டு, 30 முட்டைகளை சாப்பிட முயற்சித்த இளைஞர் திடீர் மரணம் !

நண்பரிடம் 30 முட்டைகள் பச்சையாக சாப்பிடுவதாக போட்டி போட்ட  இளைஞர் ஒருவர் 28 முட்டைகள் சாப்பிட்டவுடன் திடீரென மரணம் அடைந்தார். இந்த துயர சம்பவம் வட ஆப்பிரிக்க நாடான துனிஷியா நாட்டில் நடந்துள்ளது.துனிஷியா நாட்டை சேர்ந்த Dhaou Fatnassi, என்ற 20 வயது இளைஞர் ஒருவர், தன்னுடைய நண்பருடை விளையாட்டாக, தான் ஒரே நேரத்தில் 30 முட்டைகளை சாப்பிடுவதாக போட்டி ஒன்றில் ஈடுபட்டார். நண்பரும் அதற்கு உடன்பட்டு, 30 முட்டைகளை சாப்பிட்டால் தான் ஒரு பெரும்தொகை தருவதாக வாக்களித்து, உடனே 30 கோழி முட்டைகளை வாங்கி வந்தார். மிகுந்த ஆர்வத்துடன்

ரத்தன் டாடா ஓய்வு. டாட்டா குழுமத்தின் புதிய தலைவராகிறார் சரஸ் மிஸ்திரி !

ரத்தன் டாட்டா இன்று ஓய்வு பெறுவதையடுத்து, டாட்டா குழுமத்தின் புதிய தலைவராக சைரஸ் மிஸ்திரி பொறுப்பேற்கிறார்.இந்தியாவின் மிகப்பழமையான வணிக சாம்ராஜ்யங்களில் ஒன்று டாட்டா குழுமம் ஆகும். இன்று 10,000 கோடி டாலர் (ரூ.4.76 லட்சம் கோடி) வருவாய் ஈட்டும் இக்குழுமத்தை ரத்தன் டாட்டா கடந்த 50 ஆண்டுகளாக திறம்பட நிர்வகித்து வந்தார். இன்று அவருக்கு 75 வயது பூர்த்தியாகும் நிலையில், அடுத்த தலைவர் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட

பெண் போராட்டக்காரர்கள் அழகானவர்கள்: சர்ச்சையை கிளப்பினார் பிரணாப் மகன் !

டெல்லியில் பாலியல் பலாத்காரத்திற்காக போராடி வரும் பெண்கள் குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி அவதூறான கருத்துக்களைத் தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அபிஜித், பெண் போராட்டக்காரர்கள் அழகாக இருக்கிறார்கள், டிஸ்கோ கிளப்புகளுக்குப் போய் ஆடுகிறார்கள். டெல்லியில் தற்போது நடந்து வருவதை எகிப்தில் நடந்த போராட்டங்களுடனோ அல்லது உலகின் வேறு பகுதிகளில் நடந்த போராட்டங்களுடனோ

மீண்டும் டீசல், மண்ணெண்ணெய் விலை ரூ. 10 உயரும்?

புதுடெல்லி: டீசல் விலையை மாதம் ஒரு ரூபாய் வீதம் அடுத்த 10 மாதத்தில் ரூ.10 வரை உயர்த்தலாம் என பெட்ரோலிய அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் பெட்ரோலிய நிறுவனங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், டீசல், மண்ணெண்ணெய் விலை நிர்ணயம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவை இரண்டும் மானிய

விடுதலைப்புலிகளுக்கு 5 மில்லியன் ரூபாய் வழங்கினார் ராஜீவ்: விக்கிலீக்ஸ் அம்பலபடுதியது !

இந்திய - லங்கா உடன்படிக்கை கையெழுத்திட்ட பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏற்படும் மாதாந்த வரி வருமானத்துக்காக நட்ட ஈட்டை தருவதற்கு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி இணங்கினார்.இந்த தகவலை இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் வாஷிங்டனில் உள்ள ராஜாங்க திணைக்களத்துக்கு அறிவித்திருந்ததாக விக்கிலீக்ஸில் தகவல் வெளியாகியுள்ளது. இதனை இலங்கைக்கான அப்போதைய உயர்ஸ்தானிகர் கே.என் திக்சித் மற்றும் இந்திய பிரதமரின் பேச்சாளர் ஆகியோர் லண்டன் ஒப்சேவருக்கு தெரிவித்திருந்தனர். இதனையடுத்து லண்டன் ஒப்சேவரை கோடிட்டு இலங்கையின் பத்திரிகைகளும் இந்த இரகசிய உடன்படிக்கை

அமெரிக்காவில் கடும் பனி: 6 பேர் பலி, விமான சேவைகள் ரத்து !

அமெரிக்காவின் வட கிழக்கு மாநிலங்களில் நிலவிவரும் கடும் குளிர் மற்றும் பனிப்புயலில் சிக்கி இதுவரை குறைந்தது 6 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் மிசிசிப்பி, அலபமா ஆகிய மாநிலங்களில் உறைபனி கொட்டி வருகிறதையடுத்து 100க்கும் மேற்பட்ட விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன. அடுத்து வரும் 24 மணிநேரத்திற்குள் 46 செ.மி உயரத்திற்கு பனிகொட்டுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் அந்நாட்டின் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நியூயோர்க்கை நோக்கி பனிப்புயல் நகர்வதால், அங்கு பாரிய பனி மூட்டம் இருக்குமெனவும், கடும் குளிர் காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை

புதிய அரசியல் சாசனத்தில் முர்ஸி கையெழுத்திட்டார் !

கெய்ரோ:மக்கள் விருப்ப வாக்கெடுப்பில் அங்கீகரிக்கப்பட்ட புதிய அரசியல் சாசனத்தில் எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி கையெழுத்திட்டார். தேசம் சந்திக்கும் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அறிவித்த முர்ஸி, எகிப்தின் பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்துவதில் இனி கவனம் செலுத்தப்போவதாக தெரிவித்தார். கடுமையான செலவுகளை குறைக்கும் நடவடிக்கையை விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் சூசகமாக

வீடு புகுந்து வெட்டுவார்கள் - ராமதாஸ் !

சேலம்: சொந்த மாமன் மகள், அத்தை மகன் என உறவு இருந்தாலும், ஆண் படிக்காதவனாக, ஊர் சுற்றியாக, மதுவுக்கு அடிமை ஆனவனாக, இதுபோன்ற லாயக்கற்றவனாக இருந்தாலேயே யாரும் பெண் கொடுக்க விரும்ப மாட்டார்கள்; வீடு புகுந்து வெட்டுவார்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். சேலத்தில் நடந்த அனைத்து ஜாதி பிரதிநிதிகளின் கூட்டத்தில் ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில், திருத்தம் கொண்டுவரப்பட

வியாழன், டிசம்பர் 27, 2012

முதல்வர்கள் மாநாட்டில் ஜெ. வெளிநடப்பு! :மத்திய அரசு கூத்தாடி ஜெயாவை அசிங்கபடுத்தி விட்டதாம் !

டெல்லியில் இன்று நடைபெற்ற பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீரென வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தக் கூட்டத்தில் குறைவான நேரமே பேச ஒதுக்கி தம்மையும் தமிழக அரசையும் மத்திய அரசு அவமானப்படுத்திவிட்டது, கேவலப்படுத்திவிட்டது என்று முதல்வர் ஜெயலலிதா கொந்தளித்திருக்கிறார். டெல்லியில் 57-வது தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம் இன்று காலை தொடங்கியது. பிரதமர் மன்மோகன்சிங்

பேராசிரியர் கிலானியை சுட்டவர்கள் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் !

புதுடெல்லி:பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் குற்றமற்றவர் என விடுதலை செய்த பேராசிரியர் கிலானியை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றவர்கள் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளான ஹிந்துத்துவா தீவிரவாதிகள் ஆவர். கிலானியை தாங்கள் தாம் துப்பாக்கியால் சுட்டதாக சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் அண்மையில் என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதி ராஜேந்தர் சவுத்ரி ஒப்பு

மலேசியாவில் கடும் வெள்ளம்: 15 ஆயிரம் மக்கள் இடம்பெயர்வு !

மலேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட பலத்த மழை வெள்ளத்துக்கு 2 பேர் பலியாகி உள்ளனர், பல ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். மலேசியாவில் நான்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்வதால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இம்மழைக்கு 2 பேர் பலியாகி உள்ளதுடன், 15 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். பகாங் மாகாணத்தில் ஆற்றின் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால், பிரதான

புரட்சி படையினருடன் இணைந்தார் சிரியாவின் இராணுவ தளபதி !

சிரியாவில் இராணுவ தளபதி ஒருவர், புரட்சி படையினருடன் இணைந்து உள்ளது அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்தை பதவி விலகக் கோரி, புரட்சி படையினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அசாத் பதவி விலக மறுத்ததால் புரட்சி படையினரை அங்கீகரித்து, அவர்களுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்கி வருகிறது. இதனால் சிரியாவில் ஓயாத சண்டை நடக்கிறது. கடந்த 22 மாதங்களில்

சிதம்பரத்தில் தலித் பெண் கற்பழித்துப் படுகொலை - வழக்கை போலீஸ் மாற்றி பதிவு செய்ததால் போராட்டம் !

தலித் இன இளம் பெண்ணை சிதம்பரம் அருகே முட்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் கற்பழித்துக் கொன்றுள்ளனர். ஆனால் போலீசார் இதனை மாடியிலிருந்து குதித்து தற்கொலை என்று பதிவு செய்துள்ளதால் விடுதலைச் சிறுத்தைகள் போராட்டத்தில் களமிறங்கியுள்ளது. சிதம்பரம் அருகே உள்ள முட்லூர் என்ற இடத்திற்கு அருகில் உள்ள சம்பந்தம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தியா (வயது 20). ஸ்டுடியோ

சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார் டெல்லி பலாத்கார மாணவி !

டெல்லியில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவி , நேற்றிரவு சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூர் மெளன்ட் எலிசபெத் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். டெல்லியில் கடந்த 16 ம் தேதி இரவு மருத்துவ மாணவி ஒருவர் தனது நண்பருடன் பேருந்தில் பயணம் செய்தபோது 6 பேர் சேர்ந்த கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு இரும்பு தடியால் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அந்த மாணவிக்கு ஜப்தர்ஜங்

புதன், டிசம்பர் 26, 2012

முஸ்லிம்களும் ஆயுதம் ஏந்துவதை எதிர்பார்க்கின்றதா மஹிந்த அரசு? !

சிங்கள பேரினவாதிகளினூடாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அராஜக நடவடிக்கைகளை அரசு ஏன் வேடிக்கைப் பார்க்கின்றது. முஸ்லிம்கள் தமது உரிமைகளைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தவேண்டும் என்பதையா மகிந்த அரசு எதிர்பார்க்கின்றது என முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது. அத்துடன் முஸ்லிம்களை ஆயுதம் நிலைக்கு ஆளாக்கவேண்டாம் என்றும் முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணி வேண்டுகோள் விடுத்தது. சிறிய பிரச்சினை எனக் கூறி அரசு இவற்றைத் தட்டிக்கழித்தால் அதன் எதிர்விளைவுகள் ஆபத்தானதாக

மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவரைக் கொன்று ரூ.300 கோடி நகை கொள்ளை !

கேரளாவில் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் திருவனந்தபுரத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவரது ரூ. 300 கோடி நகைக்காக இந்தக் கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. கொல்லப்பட்டவரின் பெயர் ஹரிஹர வர்மா. இவர் மாவேலிக்கரை மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. 59 வயதான இவர் திருவனந்தபுரம் புறநகரான வெட்டியூர்காவு என்ற இடத்திற்கு அருகே உள்ள புத்துதூர்கோணம் என்ற இடத்தில் வசித்து வந்தார். இவர் வைர வியாபாரியாக இருந்து

காங்கிரஸால் ஆசிர்வதிக்கப்பட்ட மோடி !

குஜராத் மாநிலத்தில் பா.ஜ.கவின் B  டீமாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. இதனாலேயே குஜராத்தில் மோடியால் ஜெயிக்க முடிந்திருக்கிறது.  குஜராத், கர்நாடகா மற்றும் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா சிந்தனைவாதிகள் மிகுந்து காணப்படுகின்றனர். இதனாலேயே குஜராத்தில் மீண்டும் மோடியால் ஜெயிக்க முடிந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் அனைத்து மட்டங்களிலும் ஹிந்துத்துவா வலுவாக வேரூன்றி இருக்கிறது. இதனால் காங்கிரஸ் கட்சியால் பாரதிய ஜனதாவுக்கு மாற்று

பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி ... மாரடைப்பில் ரசிகர் மரணம் !

பாகிஸ்தானுடன் நேற்று நடந்த டுவென்டி 20 போட்டியின்போது பாகிஸ்தான் அணி வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சமயத்தில், ரசிகர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது பெயர் கமல் ஜெயின். 47 வயதான இவர் நேற்று இரவு பெங்களூர் சின்ன்சாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்தியா, பாகிஸ்தான் இடையிலான முதலாவது டுவென்டி 20 கிரிக்கெட் போட்டியைக் கண்டு ரசித்தார்.  பாகிஸ்தான் அணி வெற்றியை

ஈவ் டீசிங்கில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாபுச் சட்டம்! – உ. பி. அரசு முடிவு!

ஈவ்-டீசிங் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் கடுமையாக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் அனைவருக்கும் பயம் வரும் என உத்திர பிரதேச முதல்வர் அகிலேஷ் தெரிவித்துள்ளார். மேலும்

குஜராத் எம்.எல்.ஏக்களில் 57 பேர் 'கிரிமினல்கள்'... 134 பேர் கோடீஸ்வரர்கள் !

அகமதாபாத்: குஜராத் சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 182 எம்.எல்.ஏக்களில் 134 பேர் கோடீஸ்வரர்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது. மேலும் புதிய எம்.எல்.ஏக்களில் 57 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம். வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து ஆவணக் கணக்குகளை வைத்து இந்த விவரம் வெளியிடபப்ட்டுள்ளது. இதுகுறித்து குஜராத் எலக்ஷன் வாட்ச் அமைப்பின் பேராசிரியர் ஜெகதீப் சோக்கர் கூறியதாவது... மொத்தம் உள்ள

பலாத்கார பாதிப்புக்குள்ளான பெண்ணை மருமகளாக ஏற்கும் மனநிலை இருக்கிறதா?: மீராகுமார் !

டெல்லி: நமது சமூகத்தில் பெண்களைப் பற்றிய மனநிலை மாற வேண்டும் என்று லோக்சபா சபாநாயகர் மீராகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் நிகழ்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மீராகுமார், மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது போன்ற சம்பவங்களால் மக்கள் நிச்சயம் கொந்தளிப்பார்கள். ஆனால் அந்த கோபம் வன்முறைக்குப் போய்விடக் கூடாது. சமுதாயத்தில் பெண்கள் மீதான மதிப்புமிக்க விழுமியங்களை அறிவார்ந்த சமூகம் மீட்டு எடுக்க வேண்டும். வீட்டிலும் வெளியிலும் ப்ண்கள் பலவகை அநீதிக்குட் படுத்தப்படுகின்றனர். வீடுகளில் பெண்களின் பெயர் ரேஷன் கார்டுகளில் இடம்பெறுவதில்லை. காரணம்

பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர்களுக்கு சிறப்பான வரவேற்பு !

திரூர்(கேரளா):அடையாளமும், உரிமைகளும் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு, உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஊட்டி, உன்னத