திங்கள், டிசம்பர் 09, 2013

ஹைதராபாத்: ஹிந்துத்துவா தீவிரவாதிகள் எடுத்த முயற்சி முறியடிப்பு!

ஹைதராபாத்: ஜும்ஆ தொழுகையின் போது ஹைதராபாத்தில் உள்ள மக்கா மஸ்ஜிதில் முஸ்லிம் வேடத்தில் நுழைந்து குழப்பம் ஏற்படுத்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள் முயற்சி மேற்கொண்டனர். பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட நினைவு தினமான டிசம்பர் 6 (வெள்ளிக்கிழமை) அன்று ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் குழப்பம் உருவாக்கும் நோக்கத்துடன் முஸ்லிம் வேடத்தில் நுழைந்த ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் முயற்சி...
முஸ்லிம்கள் சரியான நேரத்தில் தலையிட்டதால் முறியடிக்கப்பட்டது. மஸ்ஜிதுக்குள் நுழைந்து கல் வீசிய கோவில்புரா என்ற பகுதியைச் சார்ந்த விஜய் குமார் என்ற நபரை தொழுகைக்கு வந்த முஸ்லிம்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கறுத்த டீ ஷர்ட்டும், அல்லாஹ் என்று எழுதப்பட்ட லாக்கட்டுகளும் அணிந்து சில ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மஸ்ஜிதின் உள்ளே ஜும்ஆ தொழுகையின் போது நுழைந்தனர்.பின்னர் தொழுகை முடிந்து வெளியேறும்போது காவலுக்கு நின்ற போலீஸ்காரர்கள் மீது இவர்கள் கல் வீசி தாக்கினர். மேலும் மொகல்புரா தீயணைப்பு நிலையத்தின் மீதும் இவர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர் இவர்கள் நடத்திய கல்வீச்சில் போலீஸ் கான்ஸ்டபிள் ஸ்ரீனிவாஸ், சி.ஆர்.பி.எஃப். கான்ஸ்டபிள் சுபோத் கோஷ் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து சார்மினார் தொகுதி எம்.எல்.ஏ. அஹ்மத் பாஷா தலையிட்டு கல் வீசிய நபர்களில் ஒருவரைப் பிடித்தார். பெயர் விவரங்களை பிடிப்பட்ட நபரிடம் வினவியபோது அவன் கூற மறுத்துவிட்டான். பின்னர் அவன் போலீசில் ஒப்படைக்கப்பட்டான். போலீஸ் நடத்திய விசாரணையில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் சதி அம்பலமானது.போலீஸ் மீது கல் வீசி முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் மக்கா மஸ்ஜித் சுற்றுவட்டார பகுதிகளில் கலவரத்தை உருவாக்குவதே ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் சதித் திட்டம் எனக் கருதப்படுகிறது. மோதலின்போது ஒரு போலீஸ் வாகனம் சேதமடைந்தது. அதிரடிப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்தவர்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக