செவ்வாய், டிசம்பர் 10, 2013

டெல்லி:மோடி பிரச்சாரம் செய்த 5 தொகுதிகளில் 3 இல் பா.ஜ.க தோல்வி!

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளர்பிரச்சாரம் செய்த 5 தொகுதிகளில் 3 இல் பா.ஜ.க தோல்வியைசந்தித்துள்ளது.கட்சியின் செல்வாக்கு மிகுந்த ரோஹிணி, துவாரகா,சுல்தான்பூர், மஜ்ரா, ஷஹ்தாரா, சாந்தினி சவுக் ஆகிய தொகுதிகளில் மோடிபிரச்சாரம் மேற்கொண்டார். 
இதில் துவாரகா மற்றும் ஷஹ்தாராவில் மட்டும்பா.ஜ.க வெற்றிப் பெற்றுள்ளது.சுல்தான்பூர், மஜ்ரா தொகுதிகளில் பா.ஜ.க நான்காவது தடவையாக தோல்வியை தழுவியுள்ளது.ஷாலிமார்பாக், ரோஹிணி, கரோல்பாக், க்ரேட்டர் கைலாஷ், திலக் நகர், டெல்லிகாண்ட், ஷக்கூர் பஸ்தி ஆகிய கட்சியின் செல்வாக்குமிக்க தொகுதிகளை இழந்தது பா.ஜ.கவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஷாலிமார்பாகில் நான்கு தடவை எம்.எல்.ஏவாக இருந்த ரவீந்தர் பன்ஸல், ஆம்ஆத்மி கட்சி வேட்பாளரிடம் பத்தாயிரத்திற்கும் அதிகமான வாக்குகள்வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.கரோல்பாகில் பா.ஜ.கவின் செல்வாக்குமிகுந்த வேட்பாளர் சுரேந்தர்பால் தாவலும் தோல்வியை தழுவினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக