கெய்ரோ: ஜனநாயக அரசை சதிப் புரட்சி மூலம் கவிழ்த்துவிட்டு ராணுவ சர்வாதிகார அரசு ஆட்சி நடத்தும் எகிப்தில் போலீஸ் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். 120 பேருக்கு காயம் ஏற்பட்டது. கொல்லப்பட்டவர்களில் உயர் போலீஸ் அதிகாரிகளும் அடங்குவர். தாக்குதலுக்கான பொறுப்பை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனிடையே தாக்குதலை நடத்தியது இஃக்வானுல் முஸ்லிமீன் என்று அபாண்டமாக குற்றம் சாட்டி ராணுவ அரசு அவ்வமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இடைக்கால சர்வாதிகார அரசின் பிரதமர் ஹிஸாம் பெப்லாவி இதனை அறிவித்துள்ளார்.
தாக்குதலை இஃக்வானுல் முஸ்லிமீன் கடுமையாகக் கண்டித்துள்ளது. எகிப்தின் ஐக்கியத்தை தகர்க்கக் கருதுபவர்களே இத்தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், அவர்களை உடனை கண்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது இஃக்வான்.
ராணுவ சர்வாதிகார அரசுக்கு எதிராக பல்வேறு நகரங்களில் போராட்டம் நடந்து வரும் வேளையில் போலீஸ் ஸ்டேஷன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சியினருக்கு எதிராக பிரச்சாரம் நடத்த எகிப்தின் உளவுத்துறையே இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக