திங்கள், ஆகஸ்ட் 31, 2015

இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே குஜராத் போராட்டம்: திருமாவளவன்

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ‘’குஜராத்தில் ’’இடஒதுக்கீட்டிற்கான போராட்டம் வெடித்துள்ளது, ஒட்டுமொத்த இந்தியாவையும் தன்னை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. படேல் சமூகத்தினர் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டுமென்று கோரி லட்சக்கணக்கில் திரண்டுள்ளனர்.

மலேசிய பிரதமருக்கு எதிராக இரண்டாவது நாளாக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்

ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள மலேசிய பிரதமருக்கு எதிராக போலீசின் தடையை மீறி அந்நாட்டு தலைநகரில் இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டம் நடைப்பெற்றது. 

கர்நாடகாவின் மூத்த எழுத்தாளர் கல்புர்கி சுட்டுக் கொலை: பதட்டம்

ஹம்பியில் உள்ள கர்நாடகப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், புரட்சிகர எழுத்தாளருமான எம்.எம் கல்புர்கி நேற்று  காலை மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வியாழன், ஆகஸ்ட் 27, 2015

வன்முறையில் ஈடுபடும் குஜராத் காவல்துறை: சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் வெளியிடப்பட்டதால் பரபரப்பு

குஜராத் மாநிலத்தில் இடஒதுக்கீடு கேட்டு படேல் சமூகத்தினர் நடத்திய போராட்டம் வன்முறையாகவும், சாதி கலவரமாகவும் மாறியதில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சனி, ஆகஸ்ட் 22, 2015

பணிநீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிக்கு அன்பு மகனின் கடிதம்

குழந்தையை பெற்று கொள்வதாலேயே ஒருவர் முழுமையாக தந்தையாக ஆகிவிட முடியாது. மாறாக தனது குழந்தைகளுக்கு அனைத்து செயல்களிலும் முன் மாதிரியாக இருந்து, அவர்களை அன்பு மிக்கவர்களாக, மனிதநேயம் மிக்கவர்களாக உருவாக்கும் போது தான் ஒருவர் தந்தையாக தனது கடமையை முழுமையாக ஆற்றுகிறார். அதற்கு ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்ஜீவ் பட் ஒரு சிறந்த உதாரணம்.

வியாழன், ஆகஸ்ட் 20, 2015

முஸஃபர் நகர் இனப்படுகொலை குறித்த ஆவணப் படம்: ஆக. 25 அன்று நாடு முழுவதும் திரையிடல்!


“முஸஃபர் நகர் பாக்கி ஹை” என்ற ஆவணப் படம் ஆகஸ்ட் 25 அன்று நாடு முழுவதும் திரையிடப்பட இருக்கிறது. “எதிர்ப்பு சினிமா” (Cinema of Resistance) என்ற அமைப்பு இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
நாகுல் சிங் ஸானி இயக்கியுள்ள இந்த ஆவணப் படம் முஸஃபர் நகரில் முஸ்லிம்களுக்கெதிராக சங்கப் பரிவார பயங்கரவாத சக்திகள் நடத்திய கோரமான இனப்படுகொலையைத் தோலுரித்துக்காட்டுகிறது. நாட்டையே அழிக்கத் துடிக்கும் ஃபாசிச வகுப்புவாதத்திற்கெதிராக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து பல ஆவணப் படங்களை இயக்கியவர் சுப்ரதீப் சக்கரவர்த்தி.

திங்கள், ஆகஸ்ட் 17, 2015

ஒரே கம்பத்தில் தேசிய கொடியுடன் சேர்த்து பா.ஜனதா கொடியேற்றிய தொண்டர்கள் கைது

நாடு முழுவதும் கடந்த 15–ந்தேதி சுதந்திர தின விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி பொதுமக்களும் சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள்.

54 பேருடன் மாயமான இந்தோனேஷிய விமானம் மலையில் மோதி நொறுங்கியது

இந்தோனேஷியாவில் 54 பேருடன் சென்ற விமானம் திடீரென மாயமானதை அடுத்து அந்த விமானத்தை தேடும் பணி மிகத் தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில், இந்த விமானம் மலையின் மீது மோதி விபத்துக்குள்ளானது என்றும் அதன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்துத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

வெள்ளி, ஆகஸ்ட் 14, 2015

என்.எல்.சி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பிரச்சனை! மத்திய அரசு தலையிட எஸ்.டி.பி.ஐ கோரிக்கை!

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி) தொழிலாளர்கள் கடந்த 24 நாட்களாக வேலைநிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர்.

கல்வி நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ். கைப்பற்றி வருகிறது: ராகுல் காந்தி

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி மையத்தின் தலைவராக, பா.ஜ.க.,வைச் சேர்ந்த கஜேந்திர சவுகானை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் நியமனம் செய்ததற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

செவ்வாய், ஆகஸ்ட் 11, 2015

ம.பி.யில் நுழைவுத்தேர்வு ஊழல்: பா.ஜனதா முதல்–மந்திரி தொடர்பு அம்பலம்

மத்திய பிரதேச மாநிலத்தில் தொழில் கல்வி மற்றும் அரசுப் பணி தேர்வு வாரியத்தில் பல ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடந்திருப்பது அம்பலமானது. இதுபற்றி மாநில போலீசாரின் சிறப்புப் பிரிவு விசாரணை நடத்தியது. அப்போது கடைநிலை ஊழியரில் தொடங்கி கவர்னர் வரை இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சனி, ஆகஸ்ட் 08, 2015

காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை புதிய பெயர் வைத்து பா.ஜ.க. அரசு செயல்படுத்துகிறது

காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களுக்கு புதிய பெயர் வைத்து பா.ஜ.க. அரசு செயல்படுத்தி வருவதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார். 

தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் மாநாடு தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

மாட்டு வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்: 276 பேர் கைது

தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு இறைச்சிக்காக கொண்டுச் செல்லப்படும் மாடுகளை இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தி, மாடுகளை பறிமுதல் செய்து கோசாலைகளில் ஒப்படைத்து வருகின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திங்கள், ஆகஸ்ட் 03, 2015

கலிங்கப்பட்டியில் காவல்துறையின் அடக்குமுறைக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்!

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; 

’’மதுஒழிப்பிற்கு எதிரான காந்தியவாதி சசிபெருமாள் அவர்களின் உயிர் தியாகத்துக்கு பிறகு இன்றைக்கு மதுவிலக்கு கோரியும், மதுக்கடைகளை மூடக்கோரியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

ரீ யூனியன் தீவில் உலோக சிதைவு கண்டெடுப்பு: மாயமான மலேசிய விமானத்துக்கு உரியதா என ஆய்வு?

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370 (போயிங் 777 ரகம்), கடந்த ஆண்டு மார்ச் 8-ந் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன நாட்டின் தலைநகர் பீஜிங்கிற்கு சென்றபோது நடுவானில் மாயமானது.

என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று தொடக்கம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 538 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். ஆகிய படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்களை சேர்க்க அண்ணாபல்கலைக்கழகம் கலந்தாய்வை நடத்தியது.

ஞாயிறு, ஆகஸ்ட் 02, 2015

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்காக எந்த தியாகமும் செய்ய தயார்: ஸ்டாலின் பேச்சு

எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பெருமாள் சந்திப்பு நிகழ்ச்சி (ஈத் மிலன்) சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி தலைமை தாங்கினார்.

இந்து பயங்கரவாதம் என்பதன் அர்த்தத்தைத் மாற்றிக் கூறுகிறார் ராஜ்நாத்: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே ’இந்து பயங்கரவாதம்' தொடர்பான மோதல் அதிகரித்து வருகிறது. ராஜ்நாத் சிங் ’இந்து பயங்கரவாதம்' என்பதன் அர்த்தத்தை மாற்றிக் கூறுகிறார் என்று ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.