திங்கள், ஆகஸ்ட் 17, 2015

ஒரே கம்பத்தில் தேசிய கொடியுடன் சேர்த்து பா.ஜனதா கொடியேற்றிய தொண்டர்கள் கைது

நாடு முழுவதும் கடந்த 15–ந்தேதி சுதந்திர தின விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி பொதுமக்களும் சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள்.

கேரளாவில் கட்சி கொடி கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி அவமதித்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவமும் நடந்துள்ளது. கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டம் பெருந்தலை மன்னா என்ற இடத்தில் சுதந்திர தினத்தையொட்டி பாரதிய ஜனதா தொண்டர்கள் அரவிந்தன் (வயது 40), ரதீஷ் (30) ஆகியோர் அந்த பகுதியில் 2 இடங்களில் தேசிய கொடி ஏற்றினர்.

இவர்கள் பாரதிய ஜனதா கொடி கம்பத்தில் தேசிய கொடியையும், கட்சி கொடியையும் ஒன்றாக இணைத்து ஒரே கம்பத்தில் பறக்கவிட்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலர் அதை படம்பிடித்து பேஸ்புக்கில் வெளியிட்டனர்.

மேலும் இதுபற்றிய தகவல் அந்த பகுதி போலீசுக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பிறகு கட்சி கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி அவமதித்ததாக பாரதிய ஜனதா தொண்டர்கள் அரவிந்தன், ரதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர் கோட்டையம் கோர்ட்டில் அவர்கள் 2 பேரையும் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக