வெள்ளி, மார்ச் 21, 2014

இலங்கை ராணுவத்தில் தமிழ்ப்பெண்கள் தாக்கப்படும் காட்சிகள் வெளியாகி உள்ளது.,,


இலங்கையில் போர் இறுதிகட்டத்தை எட்டிய போது அந்நாட்டு ராணுவம் போர் நெறிமுறைகளை மீறி அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தது. அதுமட்டுமல்லாது விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனை ராணுவத்தினர் பிடித்து ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக்கொன்றனர். இதேபோல் விடுதலைப்புலிகளின் ஊடக பிரிவைச்சேர்ந்த இசைப்பிரியாவும் அந்நாட்டு ராணுவத்தினரால்  கொடூரமாக கொல்லப்பட்ட  வீடியோ காட்சிகள் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில்,பெரும் அதிர்ச்சியளிக்கும் வகையில் இலங்கைக்கு எதிரான புதிய வீடியோ ஆதாரம் ஒன்று வெளியாகி உள்ளது. போருக்கு பின் இலங்கை அரசு தனது ராணுவத்தில் தமிழ்ப்பெண்களை சேர்த்து அவர்களுக்கு அங்குள்ள சிறப்பு முகாம்களில் ராணுவ பயிற்சி அளிக்கப்படுகிறது. அங்கு பயிற்சி பெறும் தமிழ்ப்பெண்கள் மீது இலங்கை ராணுவத்தினர் இரக்கமற்ற முறையில் கொடூரமாக தாக்கும் 4½ நிமிடம் ஓடும் வீடியோ காட்சிகள் ‘யு டியூப்’ இணையதளத்தில் வெளியாகி உள்ளன. 


உடற்பயிற்சியின் போது சிறு தவறு செய்தாலும் அந்த பெண்கள் தடிகளால் தாக்கப்படும் காட்சிகள் அதில் இடம்பெற்று உள்ளன. உயர் ராணுவ அதிகாரிகளால் பாலியல் வன்செயலுக்கு ஆளாக்கப்படும் கொடுமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது 

தமிழ்ப்பெண்கள் கொடூரமாக தாக்கப்படும் காட்சிகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக