வியாழன், மார்ச் 20, 2014

உக்ரைன் கடற்படை தளத்தை கிரிமியா கைப்பற்றியது: தளபதி கைது

வாக்கெடுப்பின் மூலம் தனி நாடாக தன்னைத் தானே பிரகடனப்படுத்திக் கொண்ட கிரிமியாவில் உக்ரைனுக்கு சொந்தமான ஏராளமான ராணுவ நிலைகள் மற்றும் கடற்படை தளம் உள்ளது. இவற்றை உக்ரைன் ராணுவ வீரர்கள் காவல் காத்து வருகின்றனர். சேவஸ்டோபோல் பகுதியில் கருங்கடலில் உள்ள உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான கடற்படை தளத்தை நேற்று சுற்றி வளைத்த கிரிமியா படையினர், அந்த தளத்தை கைப்பற்றி அதில் ரஷிய நாட்டின் கொடியை ஏற்றி வைத்தனர். 

அந்த தளத்தின் கடற்படை தளபதி உள்ளிட்ட வீரர்களையும் வெளியேற்றி அவர்களை கைது செய்தனர். இந்த தாக்குதல் நிகழ்ந்த சில மனி நேரத்தில் தலைநகர் சிம்பெரோபோலில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பக்சிசரேய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டின் மற்றொரு கடற்படை தளத்தையும் கிரிமியா படைகள் கைப்பற்றின. 

எவ்வித தாக்குதலோ, எதிர்தாக்குதலோ இன்றி உக்ரைன் வீரர்கள் சரணடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செய்தி சேகரிக்க அப்பகுதிக்கு நிருபர்கள் சென்றபோது ரஷ்ய படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மிரட்டி, விரட்டியடித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக