சனி, மார்ச் 22, 2014

மிஸ்ராவின் பந்துவீச்சு அபாரம்: டோனி பாராட்டு


20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் தகுதி சுற்று முடிந்து ‘சூப்பர் 10’ சுற்றும் தொடங்கியது.
தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை (குரூப்1) வீழ்த்தியது.முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 130 ரன்னே எடுத்தது. உமர் அக்மல் அதிகபட்சமாக 33 ரன் எடுத்தார். அமித் மிஸ்ரா 22 ரன் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். புவனேஸ்வர்குமார், முகமது ஷமி, ரவிந்திர ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.


பின்னர் விளையாடிய இந்திய அணி 9 பந்து எஞ்சி இருந்த நிலையில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ரெய்னா 28 பந்தில் 35 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) வீராட் கோலி 32 பந்தில் 36 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), தவான் 28 பந்தில் 30 ரன்னும் ( 5 பவுண்டரி) எடுத்தனர்.

இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் டோனி கூறியதாவது:–
சுழற்பந்து வீரர் அமித் மிஸ்ராவின் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. 70 முதல் 75 சதவீதம் வரை அவர் தாக்கத்தை ஏற்படுத்தினார். ஆனால் இனி வரும் போட்டிகளிலும் அவரால் இதைவிட இன்னும் சிறப்பாக பந்துவீச முடியும் என்று நம்புகிறேன்.

நாங்கள் சில கேட்சுகளை தவறவிட்டோம். நாங்கள் சிறப்பாக விளையாடி விட்டதால் பாதிப்பு ஏற்படவில்லை.
தவான்– ரோகித்தின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. பின்னர் வந்த கோலியும், ரெய்னாவும் அதை சரியாக பயன்படுத்தி கொண்டனர். மிடில் ஆர்டரில் ரெய்னா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக