ஞாயிறு, மார்ச் 23, 2014

கேன்டிடேட்ஸ் செஸ்: 8–வது சுற்றில் ஆனந்த் டிரா


2014–ம் ஆண்டுக்கான உலக செஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்செனுடன் மோதப்போகும் வீரரை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டி (கேன்டிடேட்ஸ் தொடர்) ரஷியாவின் கந்தி மான்சிஸ்க் நகரில் நடந்து வருகிறது.

முன்னாள் உலக சாம்பியன் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் உள்பட 8 முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் ஒவ்வொரு வீரரும் மற்ற வீரர்களுடன் தலா இரு முறை மோத வேண்டும். 14 சுற்று முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர் கார்ல்செனுடன் மோதும் வாய்ப்பை பெறுவார்.


நேற்று நடந்த 8–வது சுற்றில் ஆனந்த், அர்மேனியா வீரர் லெவோன் ஆரோனியனை சந்தித்தார். கறுப்பு நிற காயுடன் ஆடிய ஆனந்த் 19–வது நகர்த்தலில் டிரா செய்தார். இதுவரை 2 வெற்றியும், 6 டிராவும் கண்டுள்ள ஆனந்த் ஆரோனியனுடன் இணைந்து 5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக