ஞாயிறு, மார்ச் 23, 2014

பா.ஜ.க, காங்கிரஸில் 30 சதவீதம் பேர் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளான வேட்பாளர்கள்!


மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளபா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளைச் சார்ந்த வேட்பாளர்களில் 30 சதவீதம் பேர்மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 469 வேட்பாளர்களை இரு கட்சிகளும் இதுவரை அறிவித்துள்ளன.அதில், 280 பேர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களை தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆகியவை இணைந்து ஆய்வு செய்தன.அதில், 30 சதவீதம் பேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருப்பதும்,அதிலும் 13 சதவீதம் பேர் மீது கொலை மற்றும் ஆள்கடத்தல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் இருப்பதும் தெரிய வந்தது.

மேலும், ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 280 பேரில் 60 சதவீதம் பேருக்கு ரூ. 1கோடிக்கு மேல் சொத்து இருப்பதும் தெரிய வந்தது.
இந்த ஆய்வில் ஆம் ஆத்மி மற்றும் பிராந்திய கட்சிகளின் வேட்பாளர்கள்உள்படுத்தப்படவில்லை.
சிறையில் இருக்கவேண்டியவர்கள்அரசியலில் இருக்கிறார்கள். நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக