மார்ச் 21-ம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் ஏறத்தாழ 298.63 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான அன்னியச் செலாவணி வரப் பெற்றுள்ளது. இது அதற்கு முந்தைய வாரத்தை விட 1.83 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகமாகும்.கடந்த மூன்று மாதங்களாக இந்திய பங்குச்சந்தைகளில் அன்னிய முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நடப்புக் கணக்கு பற்றாக்குறை கணிசமான அளவு குறைந்து வருவதாலும், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி தடுக்கப்பட்டு வலுப்பெற்று வருவதாலும் அன்னிய முதலீட்டாளர்களின் பார்வை தற்போது இந்தியாவை நோக்கி திரும்பியுள்ளது.
இந்நிலையில், மார்ச் 21-ம் தேதி வரையிலான ஒரு மாதத்தில் மட்டும் ரூ.9597 கோடி அன்னிய முதலீடு வந்துள்ளது. இதையடுத்து நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அன்னியச் செலாவணி கையிருப்பில் அமெரிக்க டாலர் தவிர, யூரோ கரன்சி, ஸ்டெர்லிங் பவுண்டு, ஜப்பானிய யென் ஆகிய கரன்சிகளின் மதிப்பும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக