வெள்ளி, மார்ச் 21, 2014

ராஜஸ்தானில் படகு கவிழ்ந்து 8 பேர் பலி


ராஜஸ்தான் மாநிலத்தின் டோங்க் மாவட்டத்தில் உள்ள நகாடியா கிராமத்தை சேர்ந்த சுமார் 15 பேர் கசிரா பகுதியில் இருந்து நகாடியா கிராமம் நோக்கி இன்று காலை 10 மணியளவில் ஒரு படகில் சென்று கொண்டிருந்தனர். 


பிசால்பூர் அணைக்கட்டு அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக அந்த படகு கவிழ்ந்ததில் 8 பேர் நீரில் மூழ்கி, மூச்சுத் திணறி பரிதாபமாக பலியாகினர். 

நீரில் நீந்தி தத்தளித்துக் கொண்டிருந்தவர்களில் 4 பேரை இது வரை காப்பற்றியுள்ள மீட்புப் படையினர் மாயமான மேலும் 3 வரை தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக