சில நாட்களுக்கு முன்பு இணையதளத்தில் இலங்கை ராணுவத்திற்கு தேர்வான பெண்களை திட்டுவதும், அடிப்பதும் என சில காட்சிகள் இடம்பெற்றிருந்தன. நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடக்க உள்ள நிலையில் வெளியான இந்த வீடியோ படக்காட்சி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த வீடியோ காட்சி உண்மையானதுதான் என்று இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரியா ஒப்புக்கொண்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில் ''இணையதளத்தில் வெளியான வீடியோ படக்காட்சி உண்மையானது என விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராணுவ ஒழுக்கத்தை மீறியதற்காக, அந்த பெண் தேர்வர்களுக்கு ராணுவ பயிற்சியாளர்கள் தண்டனை அளித்தனர். அதற்காக அவர்கள் கையாண்ட அணுகுமுறை, வழக்கமான நடைமுறையில் இல்லாதது. அவர்களே தங்கள் அதிகாரத்தை மீறி, வரம்புமீறி செயல்பட்டுள்ளனர்'' என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக