இஸ்லாமாபாத்:வடமேற்கு பாகிஸ்தானில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதியான வஸீரிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.ஆஃப்கான் எல்லையை ஒட்டிய தத்தா கேல் நகரத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.நேட்டோ படையினருக்கு சரக்கு வழியை திறந்து கொடுத்த பிறகு அமெரிக்கா நடத்தும் முதல் ட்ரோன் தாக்குதலாகும். நகரத்தில் ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட
தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். இதே பகுதியில் மேலும் 2 தடவை ஏவுகணை தாக்குதல்கள் நடந்தன.
கொலைச் செய்யப்பட்டவர்கள் சாதாரண மக்கள் என உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். கடந்த வாரம் அமெரிக்க விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஆறுபேர் கொல்லப்பட்டனர்.
நேட்டோவிற்கு சரக்கு பாதையை திறந்து கொடுத்த பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்த கைமாறுதான் ட்ரோன் தாக்குதல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக