கொல்கத்தா:பெண்கள் குட்டைப் பாவாடை அணிவது அவர்கள் மீதான வன்முறைகள் அதிகரிக்க காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவும், வங்காள மொழி நடிகருமான சிரஞ்சீத் அகா தீபக் சக்ரவர்த்தி கூறியுள்ளார். தீபக் சக்ரவர்த்தியின் சொந்த தொகுதியில் பெண் ஒருவர் அவமானப்படுத்தப்பட்ட செய்தி வெளியானது. இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியது: “எனது 24 பர்கானா மாவட்டத்தில் இளம்
பெண்கள் குட்டைப் பாவாடை அணிவதும், குறைந்த உடை உடுத்துவதும் இளைஞர்களின் மனதைக் கெடுத்து பெண்கள் மீதான வன்முறை அதிகரிக்கக் காரணமாகிறது” என்றார்.
“பெண்களை கேலி செய்வது என்பது இன்று நேற்றல்ல, நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. ஆனால் அது தற்போது அளவுக்கு அதிகமாகப் பெருகி விட்டதற்கு பெண்களே காரணம். பெண்களை கேலி செய்வது கண்டிக்கத்தக்கதுதான். இருந்தாலும், பெண்கள் உடை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றார் அவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக