மும்பை:2008 மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா பெண் தீவிரவாதியான பிரக்யாசிங் தாக்கூருக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. பிரக்யாசிங்கிற்கு மிகச்சிறந்த சிகிட்சையை வழங்க என்.ஐ.ஏவிடம் வலியுறுத்தப்படும் என நீதிமன்றம் உறுதி அளித்தது. மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரக்யாசிங் அறுவை சிகிட்சைக்காக
ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.
தனது உறவினர்களுடன் சிகிட்சைக்கு செல்ல அவர் விரும்புவதாக பிரக்யாசிங்கின் வழக்கறிஞர் மிலன் தேசாய் வாதிட்டார். ஆனால், மிகச்சிறந்த சிகிட்சை வழங்க தயார் என்றும், அறுவை சிகிட்சைக்காக ஜாமீன் வழங்க தேவையில்லை என்றும் என்.ஐ.ஏ வழக்கறிஞர் ரோஹிணி ஸாலியன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து நீதிபதி ஆர்.சி.சவான் ஜாமீன் மனுவை தள்ளுபடிச் செய்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக