வியாழன், ஜூலை 26, 2012

வடகொரிய இளம் அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு திடீர் திருமணம் !

North Korea' s leader Kim Jong-un is married -வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், திருமணம் செய்து கொண்டு விட்டதாக "டிவி' செய்திகள் தெரிவித்துள்ளன.வடகொரிய அதிபராக இருந்த இரண்டாவது கிம் ஜாங், கடந்த டிசம்பர் மாதம் காலமானார். இதையடுத்து, அவரது மகன் கிம் ஜாங் உன், அதிபராக அறிவிக்கப்பட்டார். மீசை கூட அரும்பாத இளைஞரான கிம் ஜாங் உன், சமீபத்தில் ராணுவ அதிகாரியாக தன்னை அறிவித்து
கொண்டார்.

அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகள் வடகொரியாவை எதிரியாக கருதுகின்றன. இவர்களுக்கு சவால் விடும் வகையில் அதி நவீன ஏவுகணைகள், கிம் ஜாங் உன் ஆட்சியில் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இளம் அதிபர் கிம் ஜாங் உன், தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் அழகிய இளம் பெண்ணை கூட்டிச் செல்வதாக செய்திகள் வந்தன. இரண்டு நாட்களுக்கு முன், ருங்னா என்ற இடத்தில் உள்ள கேளிக்கை பூங்காவுக்கு அதே இளம் பெண்ணுடன் வந்தார் கிம் ஜாங். அந்த இளம் பெண்ணின் பெயர் ரி சோல் ஜு. கேளிக்கை பூங்காவில் கிம் ஜாங்கும், ரி சோலும் நெருங்கி பழகினர். அவர்களிடம் சிலர், "உங்களுக்கு திருமணமாகி விட்டதா' என்று கேட்டனர். அதற்கு அவர் பதில் சொல்லாமல் சிரித்து சென்று விட்டார்.

இதற்கிடையே, வடகொரிய "டிவி' சேனல் ஒன்று, நேற்று வெளியிட்ட செய்தியில், கிம் ஜாங் உன்னுக்கு திருமணமாகி விட்டதாக தெரிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக