திங்கள், ஜூலை 16, 2012

வறுமையை சமாளிக்க முடியாததால் 4 மாத குழந்தையை ரூ.62-க்கு விற்ற பெண் !

News at Tamilsource
 பீகார் மாநிலம் அரரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சன்னு. இவரது கணவர் மாற்றுத்திறனாளி ஆவார். சன்னு மட்டுமே சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். சன்னுவுக்கு 8 வயதில் சபீனா என்ற குழந்தை உள்ளது. சமீம் என்ற மகனும் இருக்கிறான். 

இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சன்னுவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. ஏற்கனவே ஏழ்மையில் உள்ள சன்னுவுக்கு இந்த குழந்தைகளை வளர்க்க முடியவில்லை. வறுமையை சமாளிக்க முடியாததால் தன் குழந்தைகளை விற்க தீர்மானித்தார். 

சன்னுவின் வீடு நேபாள நாட்டின் எல்லை அருகே உள்ளது. அவரது இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையை வாங்கிக் கொள்ள நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவர் முன்வந்தார். ஆனால் அந்த 4 மாத குழந்தைக்கு அவர் 50 ரூபாய்தான் தருவேன் என்றார். இதையடுத்து சன்னுவுக்கும் அவருக்கும் பேரம் நீடித்தது. கடைசியில் ரூ.62.40க்கு அந்த 4 மாத குழந்தை கை மாறியது. 

இதற்கிடையே சபீனா, சமீம் இருவரையும் தலா ரூ.100 ரூபாய்க்கு சன்னு சில மாதங்களுக்கு முன்பு விற்று விட்டதாக கூறப்படுகிறது. அந்த குழந்தைகளையும் நேபாள நாட்டுக்காரர்களே வாங்கி சென்றதாக தெரிகிறது. இது குறித்து அரரியா மாவட்ட போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக