டெல்லி: நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி நாளை பொறுப்பேற்க உள்ளார்.நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி நாளை பதவியேற்க உள்ளார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கபாடியா பதவியேற்பு செய்து வைக்கிறார்.இதற்காக நாடாளுமன்ற மைய மண்டபம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர்
மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பா.ஜ.க. தலைவர் அத்வானி, சுஷ்மா சுவராஜ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, திமுக சார்பில் டி.ஆர்.பாலு, மு.க. அழகிரி, கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
பிரணாப் முகர்ஜி பதவியேற்பையொட்டி நாடாளுமன்ற வளாகம் முதல் குடியரசுத் தலைவர் மாளிகை வரை கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பதவியேற்புக்குப் பிறகு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பிரணாப் முகர்ஜி அழைத்துச் செல்லப்படுவார். குதிரைப்படை வீரர்கள் சீருடையில் அணிவகுத்து முன்னே செல்ல பிரணாப் முகர்ஜி மாளிகைக்குள் நுழைவார். அங்கு அவருக்கு அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்படும். அதன் பிறகு குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரணாப் குடியேறுவார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக