லக்னோ:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடியை “நை துனியா” என்ற உருது பத்திரிகையின் ஆசிரியரான ஷாஹித் சித்தீகி பேட்டியெடுத்து வெளியிட்டிருந்தார். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. முஸ்லிம்களின் வாக்குவங்கியை பெற்று ஆட்சிக்கு வந்துள்ள சமாஜ்வாதிக் கட்சியை சார்ந்த ஒருவர் மோடி போன்ற கொலைக்கார பாவியை பேட்டியெடுத்து முஸ்லிம்களின் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியது. இதனால் அஞ்சிய சமாஜ்வாதிக்கட்சி, ஷாஹித் சித்தீகி தங்களது கட்சியைச்
சார்ந்தவர் அல்லர் என அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், சமாஜ்வாதிக் கட்சியின் மூத்த முஸ்லிம் தலைவரான ஆஸம்கான் இப்பேட்டி தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
“அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை. ஆனால் மோடி போன்ற கொலைகாரருடன் நாங்கள் நட்பு வைத்துக் கொள்ள விரும்பவில்லை. மோடி மனிதநேயத்தின் எதிரி. மோடி போன்ற ஒருவர் மிகப்பெரிய உருது பத்திரிகையில் தன் கருத்தைத் தெரிவிக்க வாய்ப்பளித்திருக்கக் கூடாது. அது மிகப்பெரும் தவறு” என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக