இந்தியாவின் 13-வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி நேற்று பதவியேற்றார். உடனடியாக நேற்று அவர் ஜனாதிபதி மாளிகையில் குடியேறினார். 340 அறைகள், 200-க்கும் மேற்பட்ட வேலைக்காரர்கள் கொண்ட மாளிகையில் அடுத்த 5 ஆண்டுக்கு அவர் குடியிருப்பார். இந்த நிலையில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி மற்றும் அவரது மனைவி சுவ்ரா முகர்ஜியின் சொத்து மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரணாப் முகர்ஜிக்கு ரூ. 1.26 கோடி, சுவ்ரா முகர்ஜிக்கு ரூ. 1.78 கோடி சொத்துக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் இருவரின் மொத்த சொத்து மதிப்பே ரூ. 3 கோடியே 4 லட்சம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரணாப் முகர்ஜின் அசையா சொத்துக்களில் டெல்லி முன்ரிகாவில் உள்ள வீடு (ரூ. 39.20 லட்சம்) கொல்த்தாவில் உள்ள வீடு (ரூ. 21.12 லட்சம்) பிர்பூமில் உள்ள விவசாய நிலம் (ரூ. 1.66 லட்சம்) ஆகிய சொத்துக்கள் அடங்கும். அதாவது பிரணாப் பெயரில் ரூ. 62.58 லட்சத்துக்கே அசையா சொத்துக்கள் உள்ளன.
பிரணாப்முகர்ஜியின் அசையும் சொத்துக்களாக வங்கி எப்.டி.யாக ரூ. 35.12 லட்சம், சேமிப்பு கணக்கில் ரூ. 24.26 லட்சம், ரூ. 1.06 லட்சம் மதிப்புள்ள 2000 ஆண்டு மாடல் போர்டுஐகான் கார் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. பிரணாபின் மனைவி சுவ்ராவுக்கும் டெல்லி, கொல்கத்தாவில் வீடுகள் உள்ளன.
டெல்லி வீடு ரூ. 75.86 லட்சம், கொல்கத்தா வீடு ரூ. 21.12 லட்சம் மதிப்புடையது. சொந்த கிராமமான பிர்பூமில் பிரணாப் போல சுப்ராவுக்கும் ரூ. 1.66 லட்சம் மதிப்புள்ள விவசாய நிலம் இருக்கிறது. சுவ்ராவின் அசையா சொத்துக்களாக வங்கி எப்.டி. கணக்கில் ரூ. 18.90 லட்சம், சேமிப்பு கணக்கில் ரூ. 2.67 லட்சம் உள்ளன. இவை தவிர ரூ. 31.28 லட்சம் மதிப்புள்ள நகைகளை அவர் வைத்துள்ளார்.
வீடு வாடகை, டெபா சிட் வகையில் சுவ்ரா பெயரில் ரூ. 1.50 லட்சம் உள்ளது. பிரணாப்புக்கும் அவரது மனைவிக்கும் இவ்வளவுதான் சொத்துக்கள், வேறு சொத்துக்கள் எதுவும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக