இந்தூர்:பெண்கள் அணியும் உடை மற்றும் அவர்கள் பழகும் விதத்தைப் பொறுத்தே அவர்களுக்குரிய பாதுகாப்பும், மரியாதையும் கிடைக்கும் என மத்தியபிரதேச மாநில அமைச்சர் விஜயவர்கியா கூறியுள்ளார். அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 9-ம் தேதி, பார் ஒன்றிலிருந்து வெளியில் வந்த ஒரு இளம் பெண்ணை 40 பேர் கொண்ட கும்பல் மானபங்கப்படுத்தியது. இதுபற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயவர்கியா மேலும்
கூறியது:
இந்திய கலாசாரத்துக்கேற்ப பெண்களின் உடை, வாழ்க்கை முறை மற்றும் நடத்தை ஆகியவை அமைய வேண்டும். குறிப்பாக, அடுத்தவர்களைக் கவரும் வகையில் கவர்ச்சியாக சில பெண்கள் உடை அணிகிறார்கள். இதனால் தவறாக நடந்து கொள்ள வேண்டும் எண்ணம் சிலருக்கு தோன்றுகிறது. எனவே, பெண்கள் கவர்ச்சியான உடையைத் தவிர்க்க வேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக