விரிவாக்கப்பட்ட சென்னை விமான நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங் தெரிவித்துள்ளார். திறப்பு விழாவிற்கு பிரதமர் மன் மோகன் சிங் வர இருப்பதாகவும் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள விமான
நிலையங்களை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அஜித் சிங், சென்னை விமான நிலையம் பகுதியளவு தனியார் மயமாக்கப்படும் என தெரிவித்தார். சுமார் 2700 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச முனையங்களின் பராமரிப்பு தனியாரிடம் விடப்படும் என்றார். மேலும் நாடு முழுவதுமுள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் தர விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன என்றும், இதற்காக மத்திய திட்ட குழுவிடம் சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு தனது அமைச்சரவை கேட்டுள்ளதாக தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக