டெஹ்ரான்:அணு விஞ்ஞானிகளின் கொலை தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்களை கைது செய்ததாக ஈரான் செய்தி நிறுவனமான ஃபார்ஸ் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு உள்ளேயும், வெளியேயும் இயங்கிய உளவு நெட்வர்க்குகளை அணு விஞ்ஞானிகளின் கொலை தொடர்பாக மூடிவிட்டதாகவும் ஈரானின் உளவுத்துறை அமைச்சர் ஹைதர் மஸ்லஹி தெரிவித்துள்ளார்.கொலைச் செய்யப்பட்ட விஞ்ஞானி டாரியஸ் ரஸாஇ நஜாதின் நினைவு தினத்தில் கலந்துகொண்டு
உரையாற்றும் பொழுது கொலைக்கு காரணமானவர்களை கைது செய்துள்ளதாக மஸ்லஹி தெரிவித்தார்.
ஆனால், எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்? இவர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்கள் என்பதை மஸ்லஹி தெரிவிக்கவில்லை.
ஈரானின் அணுசக்தி திட்டத்தில் பணியாற்றிய நான்கு விஞ்ஞானிகள் கடந்த 2 ஆண்டுகளில் கொலைச் செய்யப்பட்டனர். கொலைகளின் பின்னணியில் இஸ்ரேலின் உளவுப்பிரிவான மொசாத் இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக