புதன், ஜூலை 25, 2012

கலீஃபா உமர்:தொலைக்காட்சி தொடருக்கு எதிர்ப்பு !

Saudi scholar slams Omar ibn al-Khattab TV seriesகெய்ரோ:2-வது கலீஃபா(ஆட்சியாளர்) உமர் அவர்களைக் குறித்த தொலைக்காட்சி தொடரை ஒளிபரப்ப முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரமலானில் உமர்(ரலி) அவர்களின் வரலாறு தொலைக்காட்சி தொடராக ஒளிபரப்ப இருக்கும் வேளையில் இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நபி(ஸல்) அவர்களையும், அவர்களது தோழர்களையும் சித்தரிப்பதை இஸ்லாம் தடை
செய்துள்ளதாகவும், இது சிலை வணக்கத்திற்கு கொண்டு போய்விடும் என சில முஸ்லிம் அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இத்தொடரில் நடிக்கும் நடிகர்கள் இதர தொடர்களிலும் நடிப்பார்கள் என்பதால் இது உமர்(ரலி) அவர்களை அவமதிப்பது போன்றாகும் என அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், ஷேக் யூசுஃப் அல் கர்ழாவி போன்ற பிரபல மார்க்க அறிஞர்கள் தங்களின் தயாரிப்பை ஆதரிப்பதாக சவூதியில் மிடில் ஈஸ்ட் ப்ராட்காஸ்டிங் சென்டர் கூறுகிறது.
முஹம்மது நபி(ஸல்) அவர்களின் நெருங்கிய தோழரும், இரண்டாவது கலீஃபாவுமான உமர்(ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் இத்தொலைக்காட்சி தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது. நீதிமானாக விளங்கிய உமர்(ரலி) அவர்கள் இஸ்லாமிய உலகின் வெளியேயும் நன்றாக பிரபலமானவர். இந்தியாவில் உமர்(ரலி) அவர்களின் ஆட்சி வரவேண்டும் என தேசத் தந்தை காந்தியடிகள் விரும்பினார்.
30 ஆயிரம் நடிகர்களும், 10 நாடுகளைச் சார்ந்த தொழில்நுட்ப குழுவும் இணைந்து 31 எபிசோடுகளை கொண்ட இத்தொடரில் பங்கேற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக