செவ்வாய், ஜூலை 31, 2012

ஈரான் மீது போர் தொடுக்க இஸ்ரேலை தூண்டும் அமெரிக்கா !

US tells Israel it has plans to attack Iranடெல்அவீவ்:ஈரானுடன் வல்லரசு நாடுகள் நடத்தும் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் டெஹ்ரானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய ராணுவ நடவடிக்கைக் குறித்து அமெரிக்க அதிபரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இஸ்ரேல் பிரதமருடன் விவாதித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இஸ்ரேல் பத்திரிகையான ஹாரட்ஸ், ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தாமஸ் டோணிலன் இரண்டுவாரம் முன்பு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நடத்திய சந்திப்பில் ஈரான் மீது போர் தொடுப்பது தொடர்பாக விவாதித்ததை வெளியிட்டுள்ளது. பெயர் வெளியிட விரும்பாத ஒரு உயர் அமெரிக்க அதிகாரியை மேற்கோள்காட்டி ஹாரட்ஸ் இச்செய்தியை கூறுகிறது.
வல்லரசு நாடுகள், ஈரானுடன் நடத்தி வரும் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியை தழுவும் என டோணிலன் நெதன்யாகுவிடம் தெரிவித்ததாக கூறும் ஹாரட்ஸ், ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான அமெரிக்காவின் திட்டம் குறித்து விவாதித்ததாகவும் கூறுகிறது.
ஹாரட்ஸில் வெளியான செய்தியைக் குறித்து இஸ்ரேல் அதிகாரிகள் பதிலளிக்க மறுத்துவிட்டனர். ஈரானின் பூமிக்கு அடியில் உள்ள அணுசக்தி நிலையங்களை அழிக்க வல்ல அமெரிக்க ஆயுதங்களின் சக்தி குறித்தும் டோணிலான் நெதன்யாகுவிடம் தெரிவித்துள்ளார்.
பூமிக்கு அடியில் உள்ள மையங்களை அழிக்க வல்ல பங்கர்பஸ்டர் வெடிக்குண்டுகள் உபயோகிக்க தயார் நிலையில் இருப்பதாக கடந்த வாரம் அமெரிக்க விமானப்படை செயலாளர் மிஷாயேல் டோண்லி கூறியிருந்தார். ரகசியமாக ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக மேற்கத்திய சக்திகள் அமெரிக்காவின் தலைமையில் பிரச்சாரம் நடத்தி வருகின்றன. அதேவேளையில் ஈரானுக்கு எதிரான எவ்விதமான ராணுவ நடவடிக்கையும் கடுமையான எதிர்விளைவுகளை உருவாக்கும் என முன்னாள் இஸ்ரேல் ராணுவ அமைச்சர்ஷால் மொஃபாஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அண்மையில் இஸ்ரேல் அரசில் இருந்து வாபஸ் பெற்ற காதிமா கட்சியின் தலைவருமான மொஃபாஸ், ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக இஸ்ரேல் அரசின் பிரச்சாரங்கள் தவறாக புரியவைப்பதாகும் என கூறியிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக