செவ்வாய், ஜூலை 31, 2012

பர்மா தூதரை வெளியேற்றுங்கள் : குவைத் எம்.பி ஆவேசம் !

குவைத் : பர்மாவில் முஸ்லீம்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை அரபு மற்றும் முஸ்லீம்  நாடுகள் தட்டி கேட்க வேண்டும் என்றும் குவைத் அதற்கு முண்ணனியில் நின்று வழிகாட்ட வேண்டும் என்றும் குவைத் நாடாளுமன்ற உறுப்பினர் கோரியுள்ளார்.
குவைத் நாடாளுமன்ற உறுப்பினர் முபாரக் அல் அவ்லான் மியான்மரில் முஸ்லீம்கள் திட்டமிட்ட முறையில் கொல்லப்படுவதாகவும் பர்மாவில் நடக்கிறதே என்று கண்டும் காணாமல்
இருந்தால் இதே நிலை ஆசியாவில் எங்கு வேண்டுமானாலும் முஸ்லீம்களுக்கு இதே நிலை ஏற்படலாம் என்று கூறிய அவர் சர்வதேச சமூகம் இது விஷ்யத்தில் மெளனம் காப்பது குறித்து வேதனை தெரிவித்தார்.

ஒன்றுமறியா ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவது குறித்து மெளனமாக இருப்பது ஆபத்தான போக்கு என்று குறிப்பிட்ட முபாரக் ஐ.நாவில் பர்மாவை கண்டித்து குவைத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்றும் கோரினார்.

ஒன்றுமறியா மக்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்று கூறிய முபாரக் பர்மிய தூதரை குவைத்திலிருந்து வெளியேற்றுவதுடன் பாசிச பர்மிய அரசுடனான அனைத்து உறவுகளையும் குவைத் முறித்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். பர்மாவில் முஸ்லீம்களின் மீது அங்குள்ள ராணுவமும் பவுத்தர்களும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதாக அம்னெஸ்டி இன்டர்நேஷன்ல் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.



2 கருத்துகள்:

  1. இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும் வாழும் இஸ்லாமியர்கள் ஏன் பர்மாhவில் நடைபெறும் இஸ்லாமியர்கள் அழிப்புக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடாத்தவில்லை? இஸ்லாமிய அரசியல் தலைவர்கள் மௌனம் சாதிப்பது இலங்கை போன்று பர்மாவில் தேரவாத பௌத்தர்கள்தான் இந்த இனப்படுகொiலையில் ஈடுபடுவதாலா?

    பதிலளிநீக்கு
  2. இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும் வாழும் இஸ்லாமியர்கள் ஏன் பர்மாhவில் நடைபெறும் இஸ்லாமியர்கள் அழிப்புக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடாத்தவில்லை? இஸ்லாமிய அரசியல் தலைவர்கள் மௌனம் சாதிப்பது இலங்கை போன்று பர்மாவில் தேரவாத பௌத்தர்கள்தான் இந்த இனப்படுகொiலையில் ஈடுபடுவதாலா?

    பதிலளிநீக்கு