செவ்வாய், மார்ச் 07, 2017

நெடுவாசல் போராட்டத்தை திசை திருப்ப தமிழக மீனவரை சுட்டு கொன்றது இந்திய அரசா ?


கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கி சூட்டில்? மீனவர் ஒருவர் உயிரிழந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இலங்கை கடற்படையின் செயலுக்கு தமிழக அரசும், அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம்
தெரிவித்து வரும் நிலையில், மத்திய அரசு தமிழக மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.


ஆனால், மீனவர்கள் மீதான துப்பாக்கி சூட்டுக்கும் இலங்கை கடற்படைக்கும் தொடர்பு இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக இலங்கை வெளியுறவுத்துறை கூறியுள்ளது. ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் மூலம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது.



தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறிய இலங்கை வெளியுறவுத்துறை, துப்பாக்கி சூடு தொடர்பாக இந்திய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளது.



‘மீனவர்களின பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும். அனைத்து அரசு அமைப்புகளும் மீனவர்களை எப்போதும் மனிதாபிமான முறையில் நடத்த வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது’ என்றும் இலங்கை வெளியுறவுத்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில் நெடுவாசல் போராட்டத்தை திசை திருப்ப தமிழக மீனவரை 
இந்திய கடலோர படையே கொலை செய்து இருக்குமோ என சந்தேகத்தை கிளப்பி உள்ளது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக