சனி, மார்ச் 04, 2017

சிலம்பு எக்ஸ்பிரஸ் செங்கோட்டை வரை நீட்டிப்பு: பொது மக்கள் மகிழ்ச்சி

Image result for silambu expressசெங்கோட்டை: சென்னையில் இருந்து மானாமதுரை வரை இயக்கி வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை - மானாமதுரை சிலம்பு விரைவு ரயில், மானாமதுரையில் 12 மணி நேரத்துக்கும் மேலாக எந்தப் பயனும் இல்லாமல்↧
↧நிறுத்தி வைக்கப்பட்டு சென்னைக்கு இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னையில் இருந்து மானாமதுரை வரை இயக்கி வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் இரயில் கடந்த ஜன.15ம் தேதி ஞாயிற்றுகிழமை முதல் அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.


இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பல்வேறு திட்டங்களைத் துவக்கிவைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்பி நவநீத கிருஷ்ணன், எம்பி மைத்ரேயன் மற்றும் ரயில்வே அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது சென்னையில் இருந்து மானாமதுரை வரை இயக்கப்பட்டு வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், தென்காசி வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து இன்று இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 5ம் தேதி மானாமதுரைக்கு 5.30க்கு வந்து சேரும். அங்கிருந்து 5.40க்கு கிளம்பி நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டைக்கு 6.27க்கு வந்து சேர்கிறது. அதன்பின், விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, திருவில்லிப்புத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புக்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டைக்கு 10.20க்கு செல்கிறது. 5ம் தேதி மாலை 4 மணிக்கு செங்கோட்டையில் இருந்து கிளம்பி தென்காசி வழியாக அருப்புக்கோட்டைக்கு 6.49க்கு வந்து சேர்கிறது. அங்கிருந்து புறப்பட்டு மானாமதுரை வழியாக சென்னைக்கு 6ம் தேதி காலை 5.45க்கு சென்றடையும். ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். இந்த ரயில் வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சென்னையில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த இரயில் சேவையால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் திருத்தங்கல், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி நகரங்களில் தொழில் வளர்ச்சி பெருகும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக