வாஷிங்டன்: 15 நாட்களுக்குள் ஹெச்1-பி விசா பெறும் பிரீமியம் முறையை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. தற்காலிக தடை ஏப்ரல் 3 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று அமெரிக்க குடியேற்றத் துறை அறிவித்துள்ளது. வழக்காமான நடைமுறையியல் ஹெச்1- பி விசா பெற சில மாதங்கள் ஆகும். பிரீமியம் விசாவுக்கான தடை 6 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெச்1 -பி விசாவை பெறுவதில் இரு முறைகள் உள்ளன. பொது மற்றும் பிரீமியம் என்ற இரண்டு முறையில் இந்த விசாவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரீமியம் முறையால் அதிக விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இதனால் பொது முறையில் ஹெச்1-பி விசா வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது விதிக்கப்பட்டுள்ள தடையால் இந்திய மென்பொருள் ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக