சனி, மார்ச் 04, 2017

மணிப்பூரில் அடுத்தடுத்து நிலஅதிர்வு !!!

இம்பால் : மணிப்பூர் சட்டசபைக்கான முதல்கட்ட தேர்தல் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு காலை முதல் அடுத்தடுத்து நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.அதிகாலையில் சண்டல் மாவட்டத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது. தொடர்ந்து 9 மணியளவில் இந்தியா - மியான்மர் எல்லையில் மீண்டும் நிலஅதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகி உள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலஅதிர்வால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக