செவ்வாய், மார்ச் 07, 2017

தலச்சேரி ரெயில் நிலையத்தில் 13 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு : பயங்கரவாத ஆர் எஸ் எஸ்ஸிற்கு தொடர்பா ?

கேரளாவின் தலச்சேரி ஜெகன்நாத் ரெயில் நிலையம் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தலச்சேரி போலீசார் இணைந்து நடத்திய சோதனையில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால்அப்பகுதியில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.  ரெயில்வே நிலையத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்ட இந்த வெடிகுண்டுகள் தண்டவாளத்தின் அருகே புதிரில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் சில நாட்களுக்கு இப்பகுதியில் சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

மார்ச் 2 ஆம் தேதி இதே பகுதியில் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தது. இந்நிலையில் இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற ரீதியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கண்டெடுக்கப்பட்ட 13 வெடிகுண்டுகளையும் தலச்சேரி காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளதாக தலச்சேரி காவல் நிலைய துணை ஆய்வாளர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கும் பயங்கரவாத ஆர் ஸ் ஸ் அமைப்பிற்கு கண்டிப்பாக தொடர்பு இருக்குமென கேரளா போலீஸ் சந்தேகத்தை வெளிபடுத்து உள்ளது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக