செவ்வாய், அக்டோபர் 25, 2011

விக்கிலீக்ஸ் தற்காலிகமாக நிறுத்தம்:அஸாஞ்ச்அறிவிப்பு

லண்டன்:கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள விக்கிலீக்ஸ் இணையதளத்தின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் ஜூலியன் அஸாஞ்ச் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஆயிரக்கணக்கான ரகசிய விபரங்களை வெளிக்கொணர்ந்ததால் பல அமெரிக்க நிறுவனங்களும் விக்கிலீக்ஸிற்கு அளித்து வந்த பொருளாதார உதவியை நிறுத்திவிட்டன. அமெரிக்க நிறுவனங்களின் பொருளாதார உதவி நிறுத்தப்பட்டதையடுத்து விக்கிலீக்ஸின் 95 சதவீத வருமானமும் குறைந்ததாக அஸாஞ்ச் கூறுகிறார்.
இந்நிலை தொடர்ந்தால் நிறுவனத்தின் இயக்கம் நிரந்தரமாக நிறுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.பேங்க் ஆஃப் அமெரிக்கா, பே பால், மாஸ்டர் கார்ட், விஸா, வெஸ்டர்ன் யூனியன் ஆகிய நிறுவனங்கள் விக்கிலீக்ஸிற்கு அளித்துவந்த உதவியை நிறுத்திக்கொண்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக